• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் ஜெய்சங்கர் மகன்! இதுவரை நீங்க நோட் பண்ணியிருக்கீங்களா?

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் ஜெய்சங்கர் மகன்! இதுவரை நீங்க நோட் பண்ணியிருக்கீங்களா?

பாக்கியா கோபிக்கு உதவ பெரிய சமையல் ஆர்டர் ஒன்றை கையில் எடுத்துள்ளார்.

  • Share this:
    இல்லத்தரசிகளின் உள்ளம் கவர்ந்த தொடர் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் ஜெய்சங்கரின் மகன் நடிக்கிறார். 

    விஜய் டிவியில் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் ஆல் டைம் ஃபேவரெட் சீரியலாக உள்ளது. சரியாக படிக்காத குடும்பத்தலைவி, தன் குடும்ப உறுப்பினர்களுக்காக செய்யும் தியாகங்கள், படும் கஷ்டங்கள் மற்றும் அவமானங்கள் உள்ளிட்டவை தான் இந்த சீரியலின் ஒன்லைன். கணவன், தோளுக்கு மேல் வளர்ந்த 3 பிள்ளைகள், ஒரு மருமகள் மற்றும் மாமனார் & மாமியார் உள்ளிட்டோரை தனி ஒரு ஆளாக கவனித்து கொண்டு சுயதொழில் செய்யும் முயற்சியில் போராடி வரும் தாயாக பாக்கியா இருக்கிறார்.

    இவரின் செல்ல மகன் எழில் மட்டுமே இவருக்கு துணை. மற்ற எல்லோரும் பாக்கியாவை கிண்டல் செய்வது, ஏளனமாக பேசுவது என இப்படியே செய்து பாக்கியாவை கீழே தள்ளுபவர்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் பாக்கியா ஜெயித்து இவர்களின் முகத்தில் சேற்றை பூசுவார். அதைவிட கொடுமை கணவர் கோபி, ராதிகாவுடன் பழக, எப்போதுமே பாக்கியாவை பற்றி குறை சொல்லி கொண்டே இருப்பார். தனக்கு பின்னால் இப்படி ஒரு சதி நடப்பது தெரியாமலே பாக்கியா கோபிக்கு உதவ பெரிய சமையல் ஆர்டரை ஒன்றை கையில் எடுத்துள்ளார்.

    இந்த ஆர்டரை பாக்கியாவுக்கு தந்தவர் மிகப் பெரிய தொழிலதிபர் ராஜேசேகர். இந்த ராஜசேகர் கதாபாத்திரத்தின் மூலம் தான் பழம் பெரும் நடிகர் ஜெய்சங்கர் மகன் சஞ்சய் ஜெய்சங்கர் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகிறார். இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த காட்சிகளை வரும் எபிசோடுகளில் பார்க்கலாம். இவர், ஏற்கெனவே வெள்ளித்திரையில் இசை படத்தில் நடித்துள்ளார். தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வருகிறார்.

    செல்வியுடன் ஜெய்சங்கர் மகன்


    ஜெய்சங்கருக்கு 2 மகன்கள் இருப்பது பலருக்கும் தெரியும். அதில் மூத்த மகன் விஜய் சங்கர் மருத்துவராக உள்ளார். இரண்டாவது மகன் சஞ்சய் சங்கர் தான் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். சீரியலில் இவரின் வருகைக்கு பின்பு கதைக்களம் சூடுப்பிடித்து வேறு பாதைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: