விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரம் எழில் - அமிர்தா காதல் ட்விஸ்ட் சீரியலின் ஹைலைட்டாக ஒளிபரப்பாகவுள்ளது.
தமிழ் தொலைக்காட்சிகளில் லேட்டஸ்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் டி.ஆர்.பியில் முன்னணியில் உள்ளது. பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளில் ஆல் டைம் ஃபேவரெட் சீரியலாக உள்ளது. இல்லத்தரசிகளின் முகமாக, அவர்கள் படும் கஷ்டங்களையும், இழப்புகளையும் திரையில் பிரதிபலிப்பதால் சுசித்ராவுக்கு பெண்கள் ஏராளமானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். விஜய் டிவி-யில் ப்ரைம் டைமிங் ஸ்லாட்டான இரவு 8.30 மணிக்கு விறுவிறுப்பான திருப்பங்களுடன் சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.
கதைப்படி தற்போது கோபியின் சுயரூபம் அவரின் அப்பாவுக்கு தெரிந்து விட்டது. இது ஒருபுறம் இருக்க, கோபி வழக்கம் போல் ராதிகாவுடன் நேரத்தை செலவழித்து வருகிறார். அதுமட்டுமில்லை ராதிகாவை கல்யாணம் செய்யவே முடிவும் எடுத்து விட்டார். இந்த விஷயம் தெரியாமல் பாக்கியா, வீட்டில் தீபாவளி கொண்டாட்டங்களை கவனித்து கொண்டிருக்கிறார். அதே போல் இந்த சீரியலின் மற்றொரு முக்கியமான கதையம்சம் என்னவென்றால் அது எழில் - அமிர்தா காதல் காட்சிகள் தான். இதை பார்க்கவே தனி இளைஞர்கள் பட்டாளம் இருக்கிறது. இதுவும் இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
அமிர்தாவை காதலிப்பதை இதுவரை எழில் அமிர்தாவிடம் சொல்லவில்லை. அமிர்தாவின் பிறந்தநாள் அன்று காதல் பற்றி பேச வேண்டும் என நினைத்த எழிலுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை தந்தார் அமிர்தா. ஒரு குழந்தையை தூக்கி வந்து இதுதான் என்னுடைய குழந்தை என்று சொன்னார். அதிர்ச்சியில் எழில் எதுவும் பேசாமல் வீட்டுக்கு கிளம்பினார். இதனால் எழில் - அமிர்தா காதல் என்னவாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.
இதற்கு விடை கொடுப்பது போல் அமைய உள்ள இந்த வார எபிசோட். அமிர்தாவிடம் முதன்முறையாக தனது காதலை எழில் சொல்ல போகிறார். மருத்துவமனையில் வைத்து இந்த காட்சிகள் அரங்கேறியுள்ளன. இது குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. இது கனவா? நிஜமா? என்பது தான் இப்போது ரசிகர்களின் அடுத்த கேள்வி. இதற்கான விடை வரும் நாட்களில் எபிசோடில் தெரிந்து விடும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv