முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் நடிகை? இனியா போட்ட பதிவு!

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் நடிகை? இனியா போட்ட பதிவு!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திவ்யா விலக இருப்பதாக நினைத்துக் கொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை இனியா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த ஃபோட்டாவால் ரசிகர்கள் அதிர்ச்சி ஆகினர். மேலும், இந்த சீரியலில் ஜெனி ரோலில் நடிக்கும் திவ்யா சீரியலில் இருந்து விலகப்போவதாக நினைத்து பலரும் சோகத்தில் மூழ்கினர். ஆனால் உண்மை அது இல்லை. இனியாவின் அந்த பதிவுக்கு பின்னால் இருக்கும் காரணமே வேறு.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவாக நடித்து வருபவர் நடிகை நேகா மேனன். குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இதுத்தவிர சினிமாவிலும் நடித்துள்ளார். சன் டிவி-யில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் ராதிகாவின் மகளாக நடித்த அவர், அவரின் சித்தி 2 சீரியலில் செவ்வந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின்னர் அதிலிருந்து விலகிய நேகா மேனன், பாக்கியலட்சுமி சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். பாக்கியலட்சுமி சீரியலில் அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

ஒரே நாளில் சூர்யவை மாற்றிய வெண்ணிலா.. காற்றுக்கென்ன வேலி சீரியலில் சரியான ட்விஸ்ட்!

அப்பாவுக்கு செல்ல மகளாகவும், அம்மாவின் பேச்சை கேட்காத இந்த கால டீனேஜ் பெண் ரோலில் தனது நடிப்பை வழங்கி வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கு தங்கை பிறந்தார். இன்ஸ்டாவில் படு பிஸியாக அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடும் நேகா, சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி ரோலில் நடிக்கும் திவ்யா கணேசனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து மிஸ் யூ என கேப்ஷன் கொடுத்து இருந்தார்.

வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டம்..கெரியரில் ஜெயித்து கார் வாங்கிய விஜய் டிவி நாஞ்சில் விஜயன்!

இதை பார்த்த ரசிகர்கள், திவ்யா பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக இருப்பதாக நினைத்துக் கொண்டனர். இதுக் குறித்த வதந்திகளும் இணையத்தில் வேகமாக பரவின. ஆனால் உண்மை அது இல்லை. தற்போது விஜய் டிவியில் புதியதாக டெலிகாஸ்ட் ஆகி இருக்கும் தொடர் செல்லம்மா. இந்த சீரியலிலும் திவ்யா முக்கியமான ரோலில் நடிக்கிறார். ஆக மொத்தம் 2 சீரியல்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தால், திவ்யா, நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்லமா சீரியல் செட்டில் போய் தனது பணியை தொடர்கிறார். இதைக் குறிப்பிட்டு தான் நேகா ’மிஸ் யூ’ என பதிவு செய்திருக்கிறார்.

ஆகவே, ஜெனி ரோலில் நடிக்கும் திவ்யா பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகவில்லை என்ற தகவல் தற்போது ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV Serial, Vijay tv