பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கோபி - பாக்கியாவுக்கு விவாகரத்து கிடைத்து விட்டது. இது ஒருபக்கம் கோபிக்கு சந்தோஷம் என்றாலும் பாக்கியா, கோபியை கோர்டில் அசிங்கப்படுத்தியது கோபியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இதனால் அவர் பாக்கியாவிடம் சண்டை போடுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பற்றிய எல்லா கதையும் தெரிந்த பின்பு சீரியல் படு வேகமாக சென்று கொண்டிருக்கிறது. ஒருபக்கம் ராதிகா கோபியை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதே போல் பாக்கியாவும் கோபியை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். நேற்றைய எபிசோடின் தொடர்ச்சியாக இன்று கோர்டுக்கு போன பாக்கியாவை நீதிபதி விசாரிக்கிறார். கோபியும் கோர்டுக்கு வந்து சேர்கிறார். ஈஸ்வரி அம்மா, ராமமூர்த்தி தாத்தா, இனியா, செழியன் என யார் சொல்லியும் கோபி அதை கேட்பதாக இல்லை.
உண்மை தெரிந்ததும் கலங்கி அழும் பாரதி... கண்ணம்மா எடுத்த அதிரடி முடிவு!
விவாகரத்து கிடைத்தால் போதும் என்ற நோக்கத்திலே கோர்டுக்கு போகிறார். அங்கே நீதிபதி கேட்ட ஒரு கேள்விக்கு கூட கோபி பதில் சொல்லவில்லை. பாக்கியாவும் தன்னை ஏமாற்றி கோபி கையெழுத்து வாங்கினார் என்ற உண்மையை கடைசி வரை கோர்டில் சொல்லவில்லை. விவாகரத்துக்கு சம்மதம் என்கிறார். நீதிபதி அவரை சமாதானம் செய்ய பல கேள்விகளை கேட்கிறார். ஆனால் பாக்கியாவின் பேச்சில் தெளிவு இருப்பது நீதிபதிக்கு புரிகிறது. இருவருக்கும் விவாகரத்து தந்து உத்தரவிடுகிறார். சட்டப்படி இனி கோபி - பாக்கியா கணவன் மனைவி இல்லை.
பிக் பாஸ் பிரபலத்தை கரம் பிடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை! குவியும் வாழ்த்துக்கள்!
இது முடிந்ததும் செழியன் தனது அம்மா நிலையை நினைத்து வருத்தப்படுகிறார். ஆனால் பாக்கியா எதற்கும் பயப்படவில்லை. பாக்கியாவின் தைரியம் கோபிக்கு கோபத்தை தருகிறது. நேராக போய் சண்டை போடுகிறார். ”நீ என்ன பெரிய தியாகியா? என் பணம் இல்லைனா நீங்க நடுத்தெருவில் நிற்பீங்க. இட்லி, தோசை செஞ்சா மட்டும் போதாது. எழிலை நினைத்து பெருமைப்படுறீயா? இன்னும் கொஞ்ச நாள்ல அவனும் கல்யாணம் ஆனதும் உன்னை விட்டுருவான். அப்ப தான் என் அருமை உனக்கு தெரியும் “ என வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார். அடுத்து என்ன விவாகரத்து கிடைச்சுடுச்சு கோபி நேரா ராதிகாவை தேடி தான் செல்வார். ஆனால் ராதிகா அடுத்த அதிர்ச்சியை கோபிக்கு தர போகிறார் என்பதில் சந்தேகம் இல்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.