படிப்போ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்... சீரியலில் பாக்கியலட்சுமி செழியன் வாங்கும் சம்பளம் இதுதான்!

பாக்கியலட்சுமி செழியன்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது

 • Share this:
  பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மூத்த மகனாக செழியன் ரோலில் நடிக்கும் நடிகர் வேலு லட்சுமணன் என்கிற ஆர்யன் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள்.

  வெள்ளித்திரையைக் காட்டிலும் சின்னத்திரை நடிகர் நடிகைகளைப் பற்றி ரசிகர்கள் தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக அவர்களுக்கு பிடித்தமான சீரியல் நடிகர்கள் என்றால் போது அவர்களின் இன்ஸ்டா பக்கத்தை ஃபாலோ செய்வது, அவர்களின் சொந்த ஊர், படிப்பு, குடும்பம் பற்றிய தகவல்களை தேடுவது என அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் ரோலில் நடிக்கும் நடிகர் வேலு லட்சுமணன் பற்றி தெரிந்து கொள்ள குறிப்பாக பெண் ரசிகைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆன்சம் லுக்கில் அழகாக இருக்கும் செழியனுக்கு ஏகப்பட்ட கேர்ள் ஃபேன்ஸ். அவரின் இன்ஸ்டா பக்கம் போனால் தெரியும். அவர் பதிவிடும் ஒவ்வொரு படத்திற்கும் லைக்ஸ்கள் குவிகிறது.

  செழியனின் சொந்த ஊர் காரைக்குடி. வேலம்மாள் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த இவர், சென்னையில் இன்ஜினியரிங் படிப்பை தேர்தெந்தெடுத்தார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த செழியனுக்கு சினிமா என்றால் கொள்ளை ஆசையாம். அதனால் தான் மாடலிங், ஷார்ட் பிலிம்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். சென்னை சார்ப்பாக நடத்தப்பட்ட பல மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதுகளை குவித்துள்ளார். அப்போது தான் அவருக்கு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் லீட் ரோலுக்கு அடுத்தப்படியாக துணை நடிகராக நடித்தார். இந்த ரோல் நல்ல ரீச் கொடுக்க, அடுத்ததாக பாக்கியலட்சுமி சீரியலில் செழியனாக கமிட் ஆனார். இந்த சீரியலில் இவரின் ஒருநாள் சம்பளம் ரூ.10,000 என்ற தகவலும் அண்மையில் வெளியாகி இருந்தது.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  Aryan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@aryan_offl)


  அப்பாவை ரோல் மாடலாக கொண்டு வாழும் இளைஞன்.நல்ல படிப்பு, வேலை பிடித்த பெண்ணுடன் திருமணம். ஆனால் அம்மாவைப் பற்றி சற்று கவலைப்படாத செல்ஃபிஷ் ரோலில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆரம்பத்தில் இவருக்கும் ஜெனிக்குமான காதல் காட்சிகள், கல்யாண சீன்கள் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்திருந்தது. அட காதல் என்றவுடன் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  செழியனுக்கும் செம்பருத்தி சீரியலில் நடிக்கும் ஷபானாவுக்கும் கூடிய விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக இருவரும் காதலிப்பதாகவும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக ஏகப்பட்ட தகவல்கள் சோஷியல் மீடியாவில் உலாவி வருகின்றன.

  also read.. அப்பா அம்மா ஆசைக்காக தான் இதை செய்தேன்...ராஜா ராணி ’பார்வதி’’ எமோஷ்னல் பக்கம்!

  இருவர் தரப்பிலும் இந்த தகவலை பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஒருவேலை கேர்ள்ஸ் பேன்ஸ் குறைஞ்சிடும்ன்னு சீக்ரெட்டா வச்சிருக்காங்களோ?  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: