Home /News /entertainment /

வீட்டை விட்டு வெளியேறும் பாக்கியா.. கதறி அழும் இனியா!

வீட்டை விட்டு வெளியேறும் பாக்கியா.. கதறி அழும் இனியா!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியாவை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் கோபி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியே போகிறார் பாக்கியா.

    பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு பாக்கியா டைவர்ஸ் வழங்கியது அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கோர்டில் வைத்து பாக்கியா பேசிய மொத்த பேச்சுக்கும் பதிலடி கொடுக்க வீட்டில் விஸ்வரூபம் எடுக்கிறார் கோபி. அப்படியே வில்லன் முகம். இத்தனை நாளாக அவர் செய்த தவறு வெளியில் தெரியாமல் இருந்தது. ஆனால் தெரிந்த பின்பு, பாக்கியா டைவர்ஸூம் கொடுத்த பின்பு மனிஷன் வேற மாதிரி ரிவென்ச் எடுக்க ஆரம்பித்து விட்டார். பாக்கியாவை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். வீட்டில் இருக்கும் ஜெனி, இனியா, ஈஸ்வரி பாட்டி, செழியன் என எல்லோரும் பாக்கியாவிடம் கெஞ்சுகின்றனர். ஆனால் கோபி எல்லோரையும் தடுக்கிறார்.



    ’செல்லம்மா’ மறைத்த உண்மையை கண்டுப்பிடித்த மேகா!

    பாக்கியாவின் சொந்த உழைப்பில் வாங்கிய ஒரு பொருள் கூட இந்த வீட்டில் இல்லை என கோபி அசிங்கப்படுத்துகிறார். ஆனால் பாக்கியா எல்லாவற்றையும் தாங்கி கொள்கிறார். பதில் பேசவே இல்லை. தனது ட்ரெஸ்களை எடுக்க பாக்கியா ரூமுக்கு செல்கிறார். இனியா அழுது கெஞ்சுகிறார். வீட்டை விட்டு போக வேண்டாம் என்கிறார், ஆனாலும் பாக்கியா தன் முடிவில் உறுதியாக இருக்கிறார். வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் எழில் மீது கோபத்தை திருப்புகிறார்கள். எழில் சப்போர்ட்டால் தான் பாக்கியா இப்படி செய்வதாக கூறுகின்றனர்.

    பாக்கியா எங்க வீட்டில் இருந்து விடுவாரோ என்ற பயம் கோபி கண்ணில் தெரிகிறது. பாக்கியாவை தொடர்ந்து அசிங்கபடுத்துகிறார். ஈஸ்வரி பாட்டி, ராமமூர்த்தி தாத்தா என எல்லோரும் கோபி செய்த தவறை மன்னித்து விட்டார்கள். பாக்கியா டைவர்ஸ் செய்தது தான் தவறு என்கிறார்கள். இதில் நடுவில் செல்வி அக்காவை கோபி இழுக்கிறார். ஆனால் அதற்கும் தகுந்த பதிலை செல்வி அக்கா கொடுத்து விடுகிறார்.

    சேர நினைக்கும் பார்த்தி - காவ்யாவுக்கு புது பிரச்சனை!

    பாக்கியா வீட்டை விட்டு வெளியே போகும் வரை இனியா கெஞ்சுகிறார். அம்மா இல்லாமல் இந்த வீட்டில் இருக்க முடியாது என்கிறார். ஆனால் பாக்கியாவே நினைத்தாலும் கோபி அவரை வெளியே துரத்தாமல் விடுவதாக இல்லை. துணிகளை எடுத்து கொண்டு தன்னுடைய மசாலா ஆபீஸுக்கு கிளம்புகிறார் பாக்கியா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி