• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மெகா சங்கமத்தில் இணைந்த பாக்கியலட்சுமி... புது ட்விஸ்ட்

மெகா சங்கமத்தில் இணைந்த பாக்கியலட்சுமி... புது ட்விஸ்ட்

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

மகா சங்கமம் ஸ்பெஷலாக பாண்டியஸ் ஸ்டோர்ஸ் சீரியலும் தமிழும் சரஸ்வதியும் சீரியலும் ஒன்றாக சேர்ந்து ஒளிப்பரப்பாகி வருகிறது.

  • Share this:
    விஜய் டிவியில் இந்த வாரம் மெகா சங்கமம் ஸ்பெஷலாக பாண்டியஸ் ஸ்டோர்ஸ் சீரியலும் தமிழும் சரஸ்வதியும் சீரியலும் ஒன்றாக சேர்ந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. சென்னைக்கு வரும் பாண்டியஸ் ஸ்டோர்ஸ் சீரியலும் , கல்யாணத்தை முடித்த தமிழும் சரஸ்வதியும் சீரியலும் ஒன்றாக சேர்ந்து 1 மணி நேர எபிசோடுகள் ஒளிப்பரப்பாகி வருகிறது. ஏற்கெனவே போன வாரம் முழுவதும் மெகா சங்கமம் எபிசோடுகள் ஒளிப்பரப்பான நிலையில் இந்த வாரமும் அது தொடர்கிறது. ஆனால் கதையில் புது ட்விட்ஸ்டாக பாக்கியாவும் இந்த சங்கமத்தில் இணையவுள்ளார்.

    பாண்டியஸ் ஸ்டோர்ஸ் மூர்த்தி குடும்பம் கயல் பாப்பாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சென்னை வந்துள்ளனர். இங்கு தமிழின் உயிரை மூர்த்தி காப்பாற்ற இரண்டு குடும்பமும் சந்திக்கிறது. கோதை அம்மாவின் வற்புறுத்தலால் மூர்த்தி குடும்பம், அவரின் வீட்டிலே தங்கியுள்ளனர். இதுபோக சரஸ்வதியின் அப்பா, மூர்த்திக்கு நெருங்கிய உறவாகி விடுகிறார். இதனால் சரஸ்வதி - தமிழ் காதலை சேர்த்து வைக்க, கோதை அம்மாவிடம் பேசி சம்மதம் வாங்க தனம், மீனா, முல்லை ஆகியோர் முயற்சி செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தமிழுக்கு சீக்கிரமாக கல்யாணம் நடக்க கோதை அம்மா வீட்டில் ஒரு பூஜை செய்கிறார்.

    அந்த பூஜையில் விருந்தும் வைக்கிறார். ஆனால் வில்லி வசுவின் அம்மா சந்திரகலா செய்த சதியால் விருந்துக்கு சமைக்க புக் செய்யப்பட்ட சமையல்காரர்கள் திடீரென்று சாப்பாடு சமைக்காமல் ஏமாற்றுகின்றனர். இதனால் கோதை அம்மா மனமுடைந்து போகிறார். முகூர்த்த நாள் என்பதால் அவசரத்திற்கு உடனே வேற சமையல்காரர்களும் கிடைக்கவில்லை. விருந்துக்கு ஆஃபீஸில் வேலை செய்பவர்களின் குடும்பங்களையும் கோதை அம்மா அழைத்திருந்தார். இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கிறது, வந்தவர்களுக்கு எப்படி சாப்பாடு போடுவது என கலங்கி நிற்கிறார். அந்த நேரத்தில் தனம் பாக்கியாவை பற்றி யோசிக்கிறார்.



    பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவும் மூர்த்திக்கு உறவுக்கார பெண் தான். பாக்கியாவும் சமையல் ஆர்டர்களை எடுத்து செய்பவர் தான். இதனால் பாக்கியாவுக்கு உடனே தனம் ஃபோன் செய்ய, கோதை அம்மாவின் மரியாதையை காப்பாற்ற பாக்கியாவுக்கு வீட்டுக்கு வருகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் வரும் நாட்களின் மெகா சங்கமத்தில் ஒளிப்பரப்பாகவுள்ளன. மொத்தத்தில் செலவே இல்லாமல், 3 சீரியல்களையும் மெகா சங்கமத்தில் காட்டிவிட்டனர் விஜய் டிவி இயக்குனர்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: