• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • அம்மா ரோலுக்கு இவ்வளவு சம்பளமா? பாக்கியலட்சுமி சுசித்ராவின் ஒருநாள் சம்பள விவரம்!

அம்மா ரோலுக்கு இவ்வளவு சம்பளமா? பாக்கியலட்சுமி சுசித்ராவின் ஒருநாள் சம்பள விவரம்!

மூன்று குழந்தைகளுக்கு தாயாக நடித்து வரும் சுசித்ரா, கணவன் மற்றும் குடும்பமே வாழ்கையென நினைக்கும் மனைவியாக, வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் பெண்ணாக நடிக்கிறார்.

 • Share this:
  பாக்கியலட்சுமி சீரியலில் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுசித்ரா மற்றும் ரித்விகாவின் ஒரு நாள் சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

  தமிழ் தொலைக்காட்சிகளில் லேட்டஸ்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்கள் டி.ஆர்.பியில் முன்னணியில் உள்ளன. பாரதி கண்ணம்மாவுக்கு அடுத்த இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி என்ற அம்மா ரோலில் நடித்து வரும் சுசித்ரா, இல்லத்தரசிகளின் மகாராணியாக பார்க்கப்படுகிறார். இல்லத்தரசிகளின் முகமாக, அவர்கள் படும் கஷ்டங்களையும், இழப்புகளையும் திரையில் பிரதிபலிப்பதால் சுசித்ராவுக்கு பெண்கள் ஏராளமானோர் ரசிகர்களாக இருக்கின்றனர்.

  இந்நிலையில், இந்த சீரியலில் அவர் ஒரு நாள் நடிப்பதற்கு பெறும் சம்பளம் குறித்த விவரம் இப்போது வெளியாகியிருக்கிறது. பெங்களூரில் பிறந்து வளர்ந்த சுசித்ரா அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இவர் தன்னுடைய திரை வாழ்க்கையை 14 வயதிலேயே தொடங்கி விட்டார். உபேந்திரா அவர்களின் தங்கையாக எ(A) என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ஒன்மேன் ஆர்மி என்ற படத்திலும் மஞ்சுநாதா, காட் பாதர், சிவா, பீமா, கிரெசி ஸ்டார் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

  கடந்த 2014ல் AL விஜய் இயக்கத்தில் சைவம் படத்தில் நடித்திருந்தார் சுசித்ரா. பிறகு 2019ல் வெளியான எஜமான என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார். இவர் 20 -க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார்.வெள்ளி திரையில் நடித்துக் கொண்டு இருக்கும்பொழுது சுஜித்ராவுக்கு சின்ன திரையின் மீது ஆர்வம் ஏற்பட்டது.

  மனே தன என்ற தொடரின் மூலம் கன்னட சின்னத் திரைக்கு அறிமுகமான அவர், காவியாஅஞ்சலி, ராதா ரமணா, மாங்கல்ய, ஈஸ்வரி போன்ற பல கன்னட தொடர்களில் நடித்து உள்ளார். இவ்வாறு கன்னட தொடர்களில் நடித்துக் கொண்டு இருந்தவருக்கு தெலுங்கு சின்னத் திரைக்கான வாய்ப்பு கதவை தட்டியது. ஜெமினி டிவியில் கன்டெ குடற் நீ கடலி என்ற தொடரில் அறிமுகமானார். மேலும் அபரஜ்ஜித, நாகாம்மா, பந்தம், மௌன ராகம், அபிலாஷா போன்ற பத்திற்கும் மேற்பட்ட தெலுங்கு தொடர்களில் நடித்தார்.

  கலைஞர் டிவியில் ராபர்ட் ராஜஸேகரன் இயக்கத்தில் 2008ல் ஒளிபரப்பான நாணல் தொடரின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். படிப்படியாக பல்வேறு வாய்ப்புகளைப் பெற்ற சுசித்ராவுக்கு விஜய் டிவியில் பாக்யலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முதலில் இந்த தொடருக்காக இவரை அழைத்துபோது எந்த பதிலும் சொல்லாமல் இருந்துள்ளார். பிறகு நேராக சீரியல் மேனேஜரிடம் இருந்து அழைப்பு வர சென்னைக்கு வந்த அவர் இந்த தொடரில் நடிக்க தேர்வாகியுள்ளார்.

  இமான் அண்ணாச்சியை பிளான் பண்ணி வெளியேற்றினாரா இசை?

  கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீரியல் ஆரம்பித்து சில மாதங்களிலேயே பயங்கர ஹிட். இத்தொடரில் மூன்று குழந்தைகளுக்கு தாயாக நடித்து வரும் சுசித்ரா, கணவன் மற்றும் குடும்பமே வாழ்கையென நினைக்கும் மனைவியாக, வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் பெண்ணாக நடிக்கிறார். இந்த தொடர் வந்தபிறகு பலர் தங்களின் அம்மாவும் இதுபோலத் தான் துன்பங்களை தாங்கி வாழ்கிறார் என்ற எண்ணம் தோன்றும் அளவிற்கு அழகான அம்மாவாக நடிக்கிறார்.

  இந்த தொடர் ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஸ்ரீமோயி’ என்ற பெங்காலி மொழித் தொடரின் ரீமிக்ஸ் ஆகும். பாக்யலட்சுமி ரோலில் சிறப்பாக நடித்து வரும் அவருக்கு, இந்த சீரியலுக்கு ஒரு நாள் சம்பளமாக 9 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுவதாக கூறப்படுகிறது. இதேபோல் நடிகை ரித்விகாவுக்கு 4,500 ரூபாய் ஊதியமாக கொடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: