Home /News /entertainment /

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் திருமணம் இந்த காரணத்தினால் நின்றதா?

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் திருமணம் இந்த காரணத்தினால் நின்றதா?

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி திவ்யா பற்றி பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று உள்ளது.

    பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திருமணம் குறித்த பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த சில நாட்களாக இந்த விஷயம் இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

    பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருவதன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் நடிகை திவ்யா கணேஷ். இந்த சீரியலில் செழியனின் மனைவியாக நடித்து வருகிறார். இவர் முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியலில் செம்பருத்தி என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் சுமங்கலி, லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.எனினும் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தான் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயம் ஆனார். வெள்ளித்திரையில் அடங்காதே, கண்ணாடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக காணப்படும் இவரை இன்ஸ்டாவில் சுமார் நான்கரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்து வருகின்றனர்.

    சீரியலில் மட்டும் தான் அப்படி.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் டிவி நடிகை!

    இதை தவிர்த்து திவ்யா பற்றி பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு திவ்யாவுக்கு பிரபல தயாரிப்பாளர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த தயாரிப்பாளர் தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ஆனால்  அந்த திருமணம் கடைசியில் நின்று போனது. அதுக் குறித்த காரணம் வெளியாகவில்லை. பின்பு ஒரு சில வருடங்கள் கழித்து அந்த தயாரிப்பாளருக்கு திருமணம் நடைப்பெற்று ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார். இந்நிலையில், அவருக்கு முதல் திருமணம் ஆகி அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்த தகவலை அவரே பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

    இனி வெண்பா எனக்கு வேண்டாம்.. முற்றுப்புள்ளி வைத்த டாக்டர் பாரதி!

    இதனால் தான் திவ்யா அந்த திருமணத்தை நிறுத்தி இருப்பார் என்ற சந்தேகம் பலருக்கும் தற்போது  எழுந்துள்ளது.  சீரியலில் கவனம் செலுத்தி வரும் திவ்யா, சமீபத்தில் இன்ஸ்டாவில் ரசிகர்கள் எப்போது திருமணம் என்று கேட்ட கேள்விக்கு கூடிய விரைவில் என்றும் பதில் அளித்திருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி