Home /News /entertainment /

ராதிகா சொன்ன அந்த ஒரு வார்த்தை.. பாக்கியாவை தேடி போன கோபி!

ராதிகா சொன்ன அந்த ஒரு வார்த்தை.. பாக்கியாவை தேடி போன கோபி!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி, பாக்கியாவிடம் போய் மீண்டும் பிசினஸ் செய் என்கிறார்.

    பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா பேச்சை கேட்டு கோபி மிக முக்கியமான முடிவு ஒன்றை எடுக்கிறார். அதுக் குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

    பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை போலீஸ் கைது செய்தனர். அதற்கு காரணம் கோபி என்றாலும் பாக்கியாவுக்கு சமையல் ஆர்டர் கொடுத்தது ராதிகா தான். அதனால் ராதிகா - பாக்கியா இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் கஷ்டப்பட்டு கோபி, ராதிகாவை ஜாமீனில் வெளியே எடுத்தார். பாக்கியாவை பற்றி கவலைப்படவில்லை. போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் போது பாக்கியா, ராதிகாவிடம் எவ்வளவோ பேசி பார்த்தார். ஆனால் ராதிகா அதை கேட்பதாக இல்லை. அந்த சூழ்நிலையில் அவர் பாக்கியா மீது தவறு இருக்கும் என நினைத்தார்.

    தமிழ் சினிமாவின் பாசக்கார அம்மா ... நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

    ஆனால் எழில், அம்மா மீது எந்த தவரும் இருக்காது என உறுதியாக நம்பினார், கடைசியாக அதை நிரூப்பித்தும் காட்டினார். இறுதியில் நீதிமன்றம் பாக்கியா மீது தவறில்லை என கூறி வழக்கை தள்ளுப்படி செய்தது. இதுதான் சாக்கு என்று பாக்கியாவின் பிசினஸை இழுத்து மூடச் சொன்னார் கோபி. வீட்டில் பெரிய சண்டையே நடக்கிறது. ஆனால் கோபி தனது முடிவில் உறுதியாக் இருந்தார். இதனால் பாக்கியாவும் பிசினஸை விட்டு விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார். இந்த நேரம் பார்த்து தான் கோவிலில் பாக்கியா - ராதிகாவை சந்திக்கிறார்.

    RRR படத்தை விடுங்க..1990ல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ’வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ பற்றி தெரியுமா?

    நடந்த அனைத்து பிரச்சனைகளையும் ராதிகாவிடம் கூறுகிறார். பதிலுக்கு ராதிகாவும் பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இப்படி இருக்கையில் தற்போது வெளியாகி இருக்கும் புரமோவில் ராதிகா கோபியிடம் பாக்கியாவை பார்த்து பேசிய கதையை சொல்கிறார். அதுமட்டுமில்லை பாக்கியா மீண்டும் பிசினஸ் செய்ய, அவரின் கணவரிடம் வாங்க பேசலாம் என்று கூப்பிடுகிறார்.



    வழக்கம் போல் கோபிக்கு விழி பிதுங்க, நானே போய் அவரின் கணவரிடம் பேசுகிறேன் என்கிறார். அதே போல் பாக்கியாவிடம் போய் மீண்டும் பிசினஸ் செய் என்கிறார். மொத்த குடும்பத்துக்கும் ஷாக். எப்படி இந்த திடீர் மாற்றம்? என யோசிக்கின்றனர். கடைசியில் ராதிகாவால் பாக்கியாவுக்கு ஒரு நல்லது நடக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி