சின்னத்திரையில் டாப் ஜோடிகளை மிஞ்சி விட்டார்கள் பாக்கியலட்சுமி கோபியும் ராதிகாவும். இப்போது ஜெட் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் திருமணத்திற்கு பிறகும் காதலை தொடரும் கோபி - ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் மற்றும் ரேஷ்மாவின் ரீல்ஸ் வீடியோக்களை பார்த்து இருக்கிறீர்களா?
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் ஆல் டைம் ஃபேவரெட் சீரியல் லிஸ்டில் இருக்கிறது. இதில் பாக்கியாவை ஏமாற்றும் கணவர் வேடத்தில் கோபியாக நடிகர் சதீஷ் நடிக்கிறார். அதே போல் இவரின் முன்னாள் காதலியாக ராதிகா ரோலில் ஜெனிஃபர் நடித்துக் கொண்டிருந்தார். சில காரணங்களுக்காக அவர் சீரியலை விட்டு விலக தற்போது பிக் பாஸ் புகழ் ரேஷ்மா அந்த ரோலில் நடித்து வருகிறார். திருட்டு தனம் செய்வது, குடும்பத்தை ஏமாற்றுவது, மாட்டிக் கொள்ளாமல் எஸ்கேப் ஆவது என கோபியின் தகிடுதத்தம் சீரியலில் அளவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க.. Bro Daddy review : சந்தோஷமா வாங்க, சிரிச்சிட்டே போங்க.. ப்ரோ டாடி விமர்சனம்!
இவரை நம்பி ராதிகாவும் சரி, பாக்கியாவும் சரி ஏமாந்து அப்படியே கோபி சொல்வது தான் தெய்வ வாக்கு என நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் இந்த
சீரியலை பலரும் விரும்பி பார்க்கின்றனர். சீரியலில் அரங்கேறும் ட்விஸ்டும், விறுவிறுப்பான கதையும் ரசிகர்களை கட்டி பொட்டு வைத்துள்ளது. முக்கியமாக பாக்கியாவுக்கு அடுத்தப்படியாக கோபி கதாபாத்திரம் இந்த சீரியலின் மிகப் பெரிய தூண்.
இதையும் படிங்க.. சுந்தரி சீரியல் கேப்ரில்லாவின் அபார வளர்ச்சிக்கு இதுவும் முக்கியமான காரணம்!
கோபி வீட்டில் மாட்டிக் கொள்ள வேண்டும் என நினைக்காத ரசிகர்களே இல்லை எனலாம். ஆனால் கடைசி நேரத்தில் ஏதாவது திருட்டு வேலை செய்து கோபி தப்பித்து விடுவார். இப்படி தான் இத்தனை நாள் வரை சீரியல் சென்று கொண்டிருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உணவு உண்பது, டிக் டாக் செய்வது, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் கோபி. ராதிகா, பாக்கியா, செல்வி போன்ற பாக்கியலட்சுமி கதாபாத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து செய்த இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரல். அந்த வீடியோவில் கூட கோபி, பாக்கியாவிடம் இருந்து சூப்பராக எஸ்கேப் ஆவார். இந்த வீடியோவை இதுவரை பார்க்காதவர்கள் கவனத்திற்கு இதோ
இதுமட்டுமில்லை இதே போல் ரேஷ்மாவும், சதீஷூம் சேர்ந்து தெலுங்கில் கூட இன்ஸ்டா வீடியோக்களை செய்து அசத்தியுள்ளனர். அவை எல்லாமே இணையத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த வீடியோக்களை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல் கோபி எஸ்கேப் ஆகிவிட்டார் என நக்கலாக கமெண்ட் செய்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.