சின்னதிரையில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களை கவர்ந்தவையாக இருந்து வருகின்றன. அதில் இல்லதரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக இருப்பது பாக்கியலட்சுமி தொடர். பிற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விட வித்தியாசமான கதையம்சம் கொண்ட சீரியல்களாக பாக்கியலட்சுமி நெடுந்தொடர் பார்க்கப்படுகிறது. பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கேரக்டர்களான பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடிக்கின்றனர். இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமே இவர்கள் தான்.
தற்போது சீரியலின் கதைக்களம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது அதாவது, ராதிகாவை திருமணம் செய்ய கோபி, பாக்கியாவிடம் விவாகரத்து பெற வேண்டும். அதற்காக பாக்கியாவை பொய் சொல்லி ஏமாற்றி கோர்ட் வரை அழைத்து சென்று விட்டார். கோபி கேட்ட இடத்தில் எல்லாம் பாக்கியா கையெழுத்து போட கடைசியில் அது விவாகரத்து நோட்டீஸ். இப்போது கோபி- பாக்கியா விவாகரத்து வழக்கு கோர்டில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அது பாக்கியாவுக்கு தெரியாது.
Valimai OTT : தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அதே போல், கோபி மீது பாக்கியாவுக்கு சந்தேகம் வர தொடங்கி விட்டது. கடைசி மகன் எழிலும் இதை நோட் செய்கிறார். கோபிக்கு வேற ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக செல்வி அக்கா அடித்து கூறுகிறார். இந்நிலையில் அடுத்த வாரத்திற்கான சீரியல் புரமோ தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது செழியன் - ஜெனிக்கும் சண்டை வர அதைப்பற்றி கோபி விசாரிக்கிறார். கோபத்தில் செழியன், எனக்கு ஜெனியை பிடிக்கவில்லை விவாகரத்து செய்ய பொகிறேன் என ஆத்திரத்தில் சொல்ல, கோபத்தில் பாக்கியா, செழியனை பளார் பளார் என அடிக்கிறார். இந்த அடி உண்மையில் கோபிக்கு விழ வேண்டியது. பாக்கியாவை பார்த்து அதிர்ச்சியில் கோபி நிற்க, இந்த வீட்டில் விவாகரத்து பற்றி யாரும் பேச கூடாதுன்னு பாக்கியா வார்னிங் கொடுக்கிறார். பாக்கியலட்சுமி சீரியலின் இந்த புரமோ தற்போது ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.