Home /News /entertainment /

நீங்க எனக்கு தேவையில்லை.. கோபியை விட்டு பிரியும் பாக்கியா!

நீங்க எனக்கு தேவையில்லை.. கோபியை விட்டு பிரியும் பாக்கியா!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

கோபிக்கு விவாகரத்து தர அவர் தயார் ஆகி விட்டார் பாக்கியா.

    பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ஏமாற்ற நினைத்த கோபிக்கு ஷாக் கொடுக்கிறார் பாக்கியா. பாக்கியாவின் இந்த மாற்றம் மொத்த குடும்பத்திற்கும் பேரதிர்ச்சியாக இருக்கிறது.

    பாக்கியலட்சுமியில் இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் கோபி திருந்துவதாக இல்லை. ராதிகாவையும் மறப்பதாக இல்லை. தற்சமயம் இந்த பிரச்சனையை முடிக்க பிளான் போடுகிறார். அதன் படி பாக்கியாவிடம் சமாதானமாக பேசி வீட்டுக்கும் அழைத்து வருகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் கோர்டுக்கு கிளம்புகிறார் பாக்கியா. அதாவது கோபிக்கு விவாகரத்து தர அவர் தயார் ஆகி விட்டார். கோபியின் ஆசைப்படி இருவரும் பிரிந்து விடுவோம் என்கிறார் ஆனால் ஈஸ்வரி அம்மா, ராமமூர்த்தி இதற்கு சம்மதிக்கவில்லை. அவர்கள் பாக்கியா கோர்டுக்கு போக கூடாது என்று சண்டை போடுகின்றனர்.

    குக் வித் கோமாளி நிஜமான டைட்டில் வின்னர் இவர் தான்.. ஸ்ருதிக்கா சொன்ன உண்மை!

    ஒருபக்கம் இனியா, செழியன் ஆகியோர் பாக்கியாவிடம் கெஞ்சுகின்றனர். ஆனாலும் பாக்கியா தனது முடிவில் இருந்து மாறுவதாக இல்லை. அதே சமயம் எழில், பாக்கியாவுக்கு ஆதரவாக பேசுகிறார். அதற்கும் ஈஸ்வரி பாட்டி, எழிலை திட்டுகிறார். நடப்பதை எல்லா வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார் கோபி. ஆனால் பாக்கியாவின் பேச்சில் அப்படியொரு தெளிவு.அவர் கோபி எனக்கு தேவையில்லை என ஆணித்தரமாக சொல்கிறார். இதனால் கோபிக்கு கோபம் வருகிறது.

    5 வயதில் சீரியலில் நடித்த விஜய் டிவி நடிகை.. யாருன்னு கெஸ் பண்ணுங்க!

    சரியான நேரத்திற்கு கோர்டுக்கு கிளம்ப வேண்டும் என அடம்பிடிக்கிறார் பாக்கியா. இந்த பிரச்சனைக்கு ஈஸ்வரி பாட்டி, ராதிகாவை திட்டி தீர்க்கிறார். ஆனால் பாக்கியா, கோபி மீதுதான் மொத்த தப்பும் என எடுத்து சொல்கிறார். ராமமூர்த்தி தாத்தாவும் பாக்கியாவுக்கு எடுத்து சொல்கிறார். அவர் கேட்பதாக இல்லை. கடைசியில் பாக்கியாவை கோபி கூப்பிடுகிறார். என்ன திமிர் காட்டுகிறாயா? என கோபத்தில் பேசுகிறார். அதற்கு சரியான பதிலடி கொடுக்க பாக்கியா திரும்புகிறார். இத்துடன் என்றைய எபிசோடு முடிகிறது. பாக்கியாவின் பதில் என்ன என்பது நாளைக்கு தான் தெரிய வரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி