• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • இந்த சின்ன வயசுல இவ்வளவு மெச்சூரிட்டி.. வறுமை தந்த வலியுடன் ஜெயித்தவர் பாக்கியலட்சுமி அமிர்தா!

இந்த சின்ன வயசுல இவ்வளவு மெச்சூரிட்டி.. வறுமை தந்த வலியுடன் ஜெயித்தவர் பாக்கியலட்சுமி அமிர்தா!

பாக்கியலட்சுமி அம்ரிதா

பாக்கியலட்சுமி அம்ரிதா

சிறுவயதிலே வேலைக்கு போக வேண்டும் என்று முடிவு எடுத்து வேலை தேடி வந்தார்.

 • Share this:
  குடும்பத்தின் வறுமைக்காக நடிக்க வந்தவர் இன்று சின்னத்திரையில் முக்கிய பிரபலமாக ஜொலிக்கும் பாக்கியலட்சுமி அமிர்தா பற்றி பலருக்கும் தெரியாத ஃபிளாஷ்பேக்.

  இளைஞர்களின் லேட்டஸ்ட் க்ரஷாக, சின்னத்திரை இளம் அழகியாக வலம் வந்து கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி அமிர்தா, அதான் நம்ம குக் வித் கோமாளி ரித்திகாவின் சொந்த பெயர் தமிழ்செல்வி. பிறந்தது வளர்ந்தது படிச்சது எல்லாமே கோயம்புத்தூர் தான். ஆனா மற்ற சின்னத்திரை நடிகர், நடிகைகள் சொல்வது போல் இவருக்கு சினிமா மீது ஆசையோ காதலோ கிடைக்காது. இவரின் தீராத ஆசை எல்லாம் படிப்பு மீது தான். எப்படியாவது எதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கிட வேண்டும் என நினைத்து பல கனவுகளுடன் சுற்றி திரிந்தவரை 12 ஆம் வகுப்பு படிக்கும் போதே குடும்ப வறுமை கலங்க வைத்தது. முட்டி மோதி காலேஜ் முடித்தவர் சிறுவயதிலே வேலைக்கு போக வேண்டும் என்று முடிவு எடுத்து வேலை தேடி வந்தார்.

  அப்போது தான் பார்ட் டைமில் பிறந்த நாள் விழாக்கள், விருது விழாக்களில் வரவேற்பு பெண்களில் ஒருவராக நிற்கும் வேலை கிடைத்தது அதன் மூலம் தனது பேச்சு திறமையை வளர்த்து கொண்டவர், ட்ரெஸிங்ம், மேக்கப் போடுவது என எல்லாவற்றையும் கற்றுக் கொண்டார். தினம் தினம் புது புது முகங்களை சந்தித்து பேசும் வாய்ப்பும் அமிர்தாவுக்கு கிடைத்தது. அப்போது தான் லோக்கல் சேனலில் விஜேவாக வாய்ப்பு கிடைத்தது. அதையும் பார்ட் டைமில் செய்து வந்தவர், நல்ல வருமானத்திற்காக மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்க பறந்தார். சுமார் 2 ஆண்டுகள் மும்பையில் தனது பணியை தொடர்ந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வேலைக்கு செல்வதற்கு முன்பு பல சேனல்களில் விஜே வாக வாய்ப்பு கேட்டு, தனது புகைப்படத்தையும் அனுப்பி இருந்தார். வேலை பிஸிக்கு இடையில் சென்னை வந்த அமிர்தாவை தேடி வந்தது சீரியல் வாய்ப்பு. அதுவரை டிக்டாக்கில் மட்டுமே நடித்து வந்தவர், முதலில் சீரியல் வாய்ப்பு வந்ததும் பயந்தார். ஆனால் அவரை நம்பி இயக்குனர் வாய்ப்பு கொடுக்க, நடிப்பில் கலக்கிவிட்டார் . இவரின் முதல் சீரியலே ராஜா ராணி தான். அதில் வினோதினி ரோலில் கார்த்திக் தங்கையாக நடித்திருப்பார். முதல் சீரியலிலே இவரின் முகம் ரசிகர்களுக்கு தெரிய தொடங்கியது. அந்த சீரியலில் நடிகர் அக்‌ஷய் உடன் சேர்ந்து நடித்தார். இவர்களின் ஜோடிக்கு பயங்கர ஃபேன்ஸ் ஃபாலோ உருவானது. தொடர்ந்து அவருக்கு சீரியல் வாய்ப்பு வர தொடங்க, சன் டிவியில் திருமகள் சீரியலிலும் நடித்தார்.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  Tamilselvi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tamil_rithika)


  அதன் பின்பு பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக கலக்கி வருகிறார். இந்த சீரியலிலும் எழில் - அமிர்தா ஜோடிக்கும் பயங்கர ரீச். இந்த சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போதே ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாலாவுடன் சேர்ந்து சமைத்தார். ஹோம்லி லுக்கை அதிகம் விரும்பும் அமிர்தா ரியல் லைஃபிலும் ரொம்பவே மெச்சூர் பெர்சன். இவருக்கும் பாலாவுக்கு காதல் என்ற கிசுகிசுப்புகள் வந்த போதும் அதை ஸ்மார்ட்டாக ஆண்டில் செய்தார். தற்போது கில்லாடி ராணி நிகழ்ச்சியிலும் பாலாவுடன் சேர்ந்து ரசிகர்களை மகிழ்விக்கிறார். உண்மையில் இந்த இளம் வயதில் குடும்பத்திற்காக தனது கனவுகளை மறந்து தனக்கு என்ன வருமோ அதை சரியாக செய்து ரசிகர்களை கவர்ந்த தமிழ்செல்வி இன்றைய இளம் பெண்களுக்கு ரோல் மாடல் தான்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: