ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை அமிர்தாவுக்கு திருமணம்?

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை அமிர்தாவுக்கு திருமணம்?

பாக்கியலட்சுமி அமிர்தா

பாக்கியலட்சுமி அமிர்தா

இதுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரித்திகா வெளியிடுவார் எனவும் தெரிகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடிக்கும் நடிகை ரித்திகாவுக்கு கூடிய விரைவில் டும் டும் டும் என்ற செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது.

  இளைஞர்களின் லேட்டஸ்ட் க்ரஷாக, சின்னத்திரை இளம் அழகியாக வலம் வந்து கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி அமிர்தாவை இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வினோதினி என்கிற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ரித்திகா. ஆனால் அதன் பின்பு சின்னத்திரையில் முக்கியமான நடிகையாக தற்போது வளர்ந்து நிற்கிறார். விஜே, டான்ஸ், பாட்டு , ரியாலிட்டி ஷோ  , குக்கிங் ஷோ என ரித்திகா தனது பல திறமைகளை வெளிக்காட்டி இருக்கிறார்.

  பிக் பாஸில் கடைசி நேர ட்விஸ்ட்.. இந்த வாரம் வெளியேற போவது இவரா?

  குறிப்பாக இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் அமிர்தா ரோல் பட்டி தொட்டி எங்கும் இவரை கொண்டு சேர்த்தது. குடும்ப வறுமைக்காக சினிமா பக்கம் வந்தவர் இன்று வளர்ந்து தனது குடும்பதையும் நல்ல நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறார். ரித்திகா  நடத்தி வரும் யூடியூப் சேனலில் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்களை அவர் ரசிகர்களுடன் ஷேர் செய்துள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Rithika Tamilselvi (@tamil_rithika)  இந்நிலையில் ரித்திகா குறித்த செய்து ஒன்று  இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கூடிய  விரைவில் இவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக பணிபுரியும் நபருடன் ரித்விகாவுக்கு திருமணம் நடைப்பெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரித்திகா வெளியிடுவார் எனவும் தெரிகிறது. அதுமட்டுமில்லை இந்த திருமணத்திற்கு ரித்திகா விஜய் டிவி பிரபலங்கள் பலரையும் நேரில் சென்று அழைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் டிடியை அவரின் வீட்டில் ரித்திகா சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv