Home /News /entertainment /

Baakiyalakshmi: ’ஒன்மோர் ஒன்மோர் போகுது’ கோபத்தைக் காட்டிய பாக்கியலட்சுமி அமிர்தா!

Baakiyalakshmi: ’ஒன்மோர் ஒன்மோர் போகுது’ கோபத்தைக் காட்டிய பாக்கியலட்சுமி அமிர்தா!

பாக்கியலட்சுமி அமிர்தா

பாக்கியலட்சுமி அமிர்தா

இந்த வீடியோவுக்கு தான் ரித்திகாவின் ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை வாரி வழங்கியபடி உள்ளனர். இன்ஸ்டாகிராமில் ரித்திகாவை மொத்தம் 1.6 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள் .

  டிவி சீரியல்கள் - ஒருகாலத்தில் "இல்லத்தரசிகளுக்கு மட்டுமே" என்றிருந்த நிலை மற்றும் எண்ணம், இப்போது முற்றிலும் தலைகீழாகி விட்டது. திரைப்படங்கள், நியூஸ் மற்றும் சினிமா நிகழ்ச்சிகள் பார்ப்பதை தவிர்த்து வேறு எதற்குமே டிவி பக்கம் தலைவைத்து படுக்காத பலரும், லாக்டவுன் காலங்களில் வொர்க் ஃப்ரம் ஹோமில் சிக்கிக்கொண்ட காரணத்தினால் - பொழுதுகளை போக்க - வேறு வழியே இல்லாமல் டிவியே கதி என்றாகினர்.

  பாட்டி, அம்மா, அக்கா, மனைவி மற்றும் அத்தைகளுடன் சேர்ந்து டிவி சீரியல்களை பார்க்கவும் ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில், "மச்சான் நேத்து கோபி எப்படி எஸ்கேப் ஆனான் பார்த்தியா? ஒருநாள் செம்மையா சிக்குவான் பாரு!" என்று வாட்ஸ்அப் சாட்டில் பேசிக்கொள்ளும் அளவிற்க்கு டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் ஆகினர்.

  இன்னும் சொல்லப்போனால் சமூக ஊடகங்களில் தென்படும் ஒரு லேட்டஸ்ட் மீம்-ஐ அல்லது ஒரு ட்ரோல் வீடியோவை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் கூட நாம் சில டிவி சீரியல்களை பார்த்திருக்க வேண்டும் என்கிற நிலை உருவாகி விட்டது. இதை டிவி சீரியல்களின் வெற்றி என்று கூறுவதில் யாருக்கும் எந்த தயக்கமும் வேண்டாம்.

  இப்படியாக, டிவியில் ஒளிபரப்பாகும் முன்னரே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கப்படும் பிரபலமான விஜய் டிவி சீரியல்களில் ஒன்று தான் - பாக்கியலட்சுமி! நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு ஆண் ரசிகர்கள் அதிகமாகிக்கொண்டே போக இதில் நடிக்கும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களே காரணம். ஒன்று - கோபி, "மகனே.. இன்னைக்கு தப்பிச்சிட்ட.. ஆனா என்னைக்காவது ஒருநாள் வசமா மாட்டுவடி!" என்று பல்லை கடிக்கும் அளவிற்கு கோபியின் கதாபாத்திரம் எழுதப்பட்டு வருகிறது.

  ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்... விழாவை சிறப்பித்த 80'ஸ் பிரபலங்கள்!

  அடுத்தது வேறு யாரும் இல்லை - அமிர்தா கதாபாத்திரத்தில் நடிக்கும் நம்ம ரித்திகா தான்! குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில், நடிகை ரித்திகாவின் அப்பாவித்தனத்தையும், க்யூட்-க்யூட் ஆன ரியாக்ஷன்களையும் பார்த்த பலரும் அவருக்கு ரசிகர்-ரசிகைகள் ஆகினர். இதனாலேயே ரித்திகா, அமிர்தாவாக நடிக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு அவரது ரசிகர்கள் படையெடுத்தனர்.

  ரித்திகாவையும் சும்மா சொல்ல கூடாது. சமூக ஊடக தளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கிறார். தனக்கென ஒரு ஆர்மியையும் உருவாக்கி வருகிறார், அவ்வவ்போது போட்டோ மற்றும் வீடியோக்களையும் பகிர்வார். அதிலொரு லேட்டஸ்ட் மற்றும் க்யூடஸ்ட் இன்ஸ்டாகிராம் வீடியோவை தான் ரித்திகா ரசிகர்கள் ரீப்பீட் மோட்-இல் பார்த்து வருகின்றனர்.

  இது எங்களுடைய தவறில்லை... இலங்கை குறித்து உணர்ச்சி வசப்பட்ட லாஸ்லியா   
  View this post on Instagram

   

  A post shared by Rithika Tamilselvi (@tamil_rithika)


  அந்த வீடியோவில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவின் மகளாக நடிக்கும் குட்டி பாப்பா நிலா தான் ஹைலைட்! ரித்திகா ஒரு சீனில் தனியாக நடித்து கொண்டு இருக்கும் போது நிலா பாப்பா அவரை நோக்கி சென்று "அம்மா!" என்று அழைக்க, சிரிப்பை கட்டுப்படுத்த முடியாத ரித்திகா, தான் நடிக்கும் சீனை விட்டு வெளியேறி, "உன்னால ஒன்மோர் போகுது தெரியுமா?!" என்று நிலாவை செல்லமாக அதட்டுகிறார். இந்த வீடியோவுக்கு தான் ரித்திகாவின் ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை வாரி வழங்கியபடி உள்ளனர். இன்ஸ்டாகிராமில் ரித்திகாவை மொத்தம் 1.6 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  அடுத்த செய்தி