உலக மகளிர் தினமானது உலகெங்கிலும் உள்ள உழைக்கும் பெண்களை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இதை அனுசரிக்கும் விதமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருவார்கள். சிலர் தனக்கு பிடித்த பெண்களின் புகைபடங்களை பதிவிட்டு அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறுவார்கள். மேலும் சிலர் தனது அம்மா, சகோதரிகள் போன்றவர்களை குறிப்பிட்டு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள்.
அந்த வகையில் மகளிர் தினத்தன்று எல்லா வகையான சமூக வலைத்தளங்களிலும் பல விதமான பதிவுகளை போஸ்ட் செய்தும் வருவார்கள். கடந்த 8ஆம் தேதி அன்றும் இது போன்று நடந்திருந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் மகளிர் தினத்தை குறித்து இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் போன்ற தளங்களில் பதிவிட்டு தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர். இதே போன்று குக் வித் கோமாளி புகழ் ரித்திகாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போஸ்ட் செய்திருந்தார். இது அவரது ஃபாலோவர்ஸ் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
விஜய் டிவியில் சில காலங்களுக்கு முன்னரே ரித்திகா அறிமுகமானார். மிக சில நாட்களிலேயே மக்களின் மனத்தில் இவர் இடம் பிடித்து விட்டார். குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமானவராக மாறி உள்ளார். இவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே போன்று குக் வித கோமாளி சீசன் இரண்டிலும் கலந்து கொண்டுள்ளார். இவருக்கென்று இன்ஸ்டாகிராமில் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் அவ்வப்போது இன்ஸ்ட்டா ரீலிஸ் பதிவுகளை போஸ்ட் செய்து வருவார்.
கடந்த 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக சிறப்பான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் கேரளாவின் முன்னாள் சுகாதார துறை அமைச்சரை சந்தித்த நிகழ்வு குறித்து பெருமையுடன் சிலவற்றை பகிர்ந்துள்ளார். 'ஒரு பெண்ணின் குரலாக அவளது வலிமை இருக்கும். ஆனால் அந்தக் குரலைக் கண்டுபிடிப்பதற்கான தேடல் மிகவும் கடினமாக இருக்கும். 'கொரோனா ஸ்லேயர்' என்ற பெயரைப் பெற்ற மிகவும் உத்வேகம் தரும் பெண் ஒருவரை இன்று நான் சந்தித்தேன், அது வேறு யாருமல்ல, கேரளாவின் முன்னாள் சுகாதார அமைச்சர் "கே.கே. ஷைலஜா" அம்மா அவர்களை தான். டீச்சர் அம்மா என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.
'மகளிர் தினத்தன்று இவரை சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு முறையும் என்னை பாசமாக மகளே...மகளே.. என்று மலையாளத்தில் அழைத்தார். ஒரு வெற்றிகரமான பெண் தலைவி, இந்த அளவுக்குப் பொது மக்களுடன் இணைந்து செயல்படுவது பெரிய விஷயம். இந்த அற்புதமான நாளில், அழகான மற்றும் வலிமையான பெண்கள் அனைவருக்கும் எனது இனிய மகிழ்ச்சியான மகளிர் தின வாழ்த்துக்கள்.' என்று ரித்திகா தனது பதிவில் குறிப்பிட்டு போஸ்ட் செய்துள்ளார். இந்த பதிவை பலர் லைக் செய்து வருகின்றனர். மேலும் ரித்திகாவின் ரசிகர்கள் மகளிர் தின வாழ்த்துக்களை கமெண்ட்ஸ் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.