Home /News /entertainment /

மொத்த குடும்பத்திற்கும் ஷாக் கொடுத்த கோபி... எல்லாத்துக்கும் ராதிகா தான் காரணம்!

மொத்த குடும்பத்திற்கும் ஷாக் கொடுத்த கோபி... எல்லாத்துக்கும் ராதிகா தான் காரணம்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமியில் கோபியின் இந்த திடீர் மாற்றத்துக்கு ஏதோ காரணம் இருக்கிறது என வழக்கம் போல் செல்வி அக்கா சொல்கிறார்.

    பாக்கியலட்சுமி சீரியலில்  பாக்கியாமீண்டும்  பிசினஸ் செய்யலாம் என பர்மிஷன் கொடுத்து,  கோபி ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தருகிறார்.

    ஆரம்பத்தில் பிரச்சனையே இல்லாமல் போன ராதிகா காதல் கதை, இப்போது கோபிக்கு தலைவலியாக மாறிவிட்டது. அதிலும் பாக்கியா - -செல்வி ராதிகா வீட்டுக்கு வந்த போது, கோபி முகத்தை கூட காட்டாமல் போனது தான் ராதிகாவுக்கு சந்தேகத்தை தந்தது. அன்றைய நாளிலிருந்து ராதிகா, அடிக்கடி கோபியிடம் டீச்சர் டீச்சர் என்று பாக்கியாவை பற்றி பேசுகிறார். உச்சக்கட்டமாக பாக்கியாவை நேரில் பார்க்க கோபியை வீட்டுக்கு அழைத்து சென்றார். அன்றைய நாள் தான் பாக்கியாவையும் ராதிகாவையும் போலீஸார் கைது செய்தனர். இப்படி இருக்கையில், ஒருவழியாக எல்லா பிரச்சனையும் முடிந்து பாக்கியா வீட்டுக்கு வந்து விட்டார்.

    Avatar 2: அவதார் இரண்டாம் பாகத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    பாக்கியாவை வெளியில் எடுக்க எந்த முயற்சியும் செய்யாத கோபி, மறுநாளே வீட்டில் மிகப் பெரிய பிரச்சனை செய்தார். அதாவது இனிமேல் பாக்கியா சமையல் பிஸினஸ் செய்யக்கூடாது என்றார். இதற்கு பாக்கியா கட்டுப்பட்டு பிசினஸ் இனிமேல் செய்ய மாட்டேன் என்றார். அந்த நேரம் பார்த்து ராதிகா - பாக்கியாவை கோயிலில் சந்தித்து பேச கதையே தலைகீழானது. ராதிகா, கோபியிடம் இதைப்பற்றி சொல்லி, பாக்கியாவின் கணவரை பார்த்து நேரில் பேசலாம் என கூப்பிடுகிறார்.

    போனால் மட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் கோபியும் ராதிகாவை சமாதானம் செய்து, நானே போய் பாக்கியாவின் கணவரிடம் பேசுகிறேன் என்கிறார். வேற வழியில்லாமல், இன்றைய எபிசோடில் பாக்கியாவிடம் மீண்டும் பிசினஸ் செய்யும்படி கோபி கூறுகிறார். இதைக் கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி ஆகுகின்றனர். அதுமட்டுமில்லை கோபியின் இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என புரியாமல் குழம்புகின்றனர்.

    ‘அஜித், விஜயை விட காந்தி, வ.உ.சிக்கு தட்டும் கைதட்டல் அதிகமாக இருக்க வேண்டும்’ – தமிழிசை சௌந்தரராஜன்

    கடைசியில் ராதிகாவுக்காக கோபி மனசு மாற, பாக்கியாவும் சமையல் பிசினஸை தொடர முடிவு எடுக்கிறார். ஆனால் கோபியின் இந்த திடீர் மாற்றத்துக்கு ஏதோ காரணம் இருக்கிறது என வழக்கம் போல் செல்வி அக்கா சொல்ல, பாக்கியா அவர் என் மீது இருக்கும்  கோபத்தில் தான் அப்படி சொல்கிறார் என எப்போதும் போலவே அப்பாவியாக நம்புகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி