Home /News /entertainment /

பாக்கியாவை வெளியே துரத்த நினைத்த கோபி.. எழில் கொடுத்த பதிலடி!

பாக்கியாவை வெளியே துரத்த நினைத்த கோபி.. எழில் கொடுத்த பதிலடி!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

. இனிமேல் பாக்கியா இந்த வீட்டில் இருக்க கூடாது என சொல்கிறார் கோபி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடின் பரபரப்பு புரமோ தற்போது வெளியாகியுள்ளது. கோபியை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் எழில்.

    பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு பாக்கியா விவாகரத்து வழங்கி விட்டார். வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவு சொல்லியும் பாக்கியா இந்த விஷயத்தில் தனது முடிவை மாற்றிக் கொள்வதாக இல்லை. இனியாவும் அழுது கொண்டே பாக்கியாவிடம் டைவர்ஸ் வேண்டாம் என்றார். ஆனால் பாக்கியா மிகவும் தைரியமாக இந்த முடிவை எடுக்கிறார். அதற்கு இளைய மகன் எழிலும் துணையாக இருக்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில்  கோர்ட்டில் இருந்து வீடு திரும்புகிறார் பாக்கியா.



    பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரின் ஹோட்டல் திறப்பு விழா... மூர்த்தி - தனம் வருவார்களா?

    ஆனால் கோபி பாக்கியாவை ஏற்றுக் கொள்வதாக இல்லை. இனிமேல் பாக்கியா இந்த வீட்டில் இருக்க கூடாது என சொல்கிறார். இனியாவிடமும் இனிமேல் உனக்கு அம்மா வேண்டாம் என்கிறார். இதற்கு ஈஸ்வரி அம்மாவும் சம்மதம் சொல்கிறார். ஆனால் ராமமூர்த்தி தாத்தா பாக்கியா பக்கம் நிற்கிறார். ராதிகா விஷயத்தில் நீ செய்த தவறு தான் இதற்கெல்லாம் காரணம் என உண்மையை எடுத்துச் சொல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்று பாக்கியா வீடு திரும்ப, அவரை வீட்டுக்குள் வரக்கூடாது என்கிறார் கோபி.

    தனுஷ் படத்தில் நடிக்கும் சூப்பர் சிங்கர் பிரபலம்.. கடைசி நேரத்தில் கொடுத்த சர்ப்ரைஸ்!



    பாக்கியா பேசாமல் அமைதியாக நிற்கிறார். ஆனால் எழில் இந்த முறை விடுவதாக இல்லை. கோபிக்கு சரியான பதிலடி கொடுக்கிறார். இந்த வீடு என்னுடைய பணத்தில் கட்டியது. இதில் உனக்கு எந்த உரிமையும் இல்லை. நீ உள்ளே வரக்கூடாது என கோபி, பாக்கியாவை பார்த்து சொல்கிறார். அதற்கு எழில், இத்தனை வருஷமாக எங்க அம்மா செய்த வேலைக்கு நீங்க கொடுத்த சம்பளம் என்ன? எனக் கேட்கிறார். கோபியிடம் பதிலே இல்லை. வீடு மட்டும் தான் உங்களுடையது. இத்தனை வருஷமா பாசத்தை கொட்டி எங்களை வளர்த்தது  எங்க அம்மா தான். உங்களுக்கு தான் 2 வீடு என கோபியை அசிங்கப்படுத்துகிறார். இதை எல்லாம் ஈஸ்வரி பாட்டி பார்த்து எழிலை முறைக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி