Home /News /entertainment /

வெளியே போன கோபி... எழிலுக்கு எதிராக திரும்பிய பாக்கியா குடும்பம்!

வெளியே போன கோபி... எழிலுக்கு எதிராக திரும்பிய பாக்கியா குடும்பம்!

எழில்

எழில்

பாக்கியாவை , அப்பா ஏமாற்றி விட்டார் என்ற ஆதங்கத்தில் எழில் இருக்கிறார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பாக்கியாவுக்கு துணையாக நின்ற ஒரே காரணத்தினால் மொத்த குடும்பமும் எழிலுக்கு எதிராக மாறி பேசுகின்றனர்.

    பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவுக்கு எப்போதுமே ஆறுதலாக இருப்பது அவரின் இளைய மகன் எழில் தான். சமையல் ஆர்டர் தொடங்கி மசாலா பிசினஸ், கின்னஸ் சாதனை வரை பாக்கியாவுக்கு சப்போர்ட் செய்து தனது அம்மாவுக்காக எல்லா இடத்திலும் நின்றார் எழில். கோபி பற்றிய உண்மை ஏற்கெனவே தெரிந்து இருந்தும் பாக்கியாவுக்காக அதை மறைத்தார். இப்படி இருக்கையில் பாக்கியா - கோபி விஷயத்தில் பாக்கியாவை தூண்டி விட்டது எழில் தான் என்று மொத்த குடும்பமும் அவர் மீது கோபத்தில் உள்ளனர்.

    பூஜை அறையில் கூட ஃபோட்டோவுக்கு போஸ்.. கேமரா அழகி ஷிவானி!

    இன்றைய எபிசோடில் செழியன், எழிலை அடிக்க போகிறார். ஈஸ்வரி பாட்டியும் எழிலை திட்டி தீர்க்கிறார். பாக்கியாவுக்கு எடுத்து சொல்லாமல் அவரை டைவர்ஸ் வரை அழைத்து சென்றது எழில் தான் என தவறாக நினைத்து கோபத்தை கொட்டுகிறார். அதே போல் கோபியும் எழில் மீது செம்ம கோபத்தில் இருக்கிறார். எழில் இருக்கும் தைரியத்தில் தான் பாக்கியா இப்படியெல்லாம் பேசுகிறார் என்பது கோபியின் எண்ணம். இதனால் அனைவருக்கும் எழில் தவறாக தெரிகிறார்.



    அதே நேரம் தாயாக பாக்கியா, எழிலை நினைத்து ஒவ்வொரு நொடியும் பெருமை கொள்கிறார். அதுமட்டுமில்லை எழிலை யாரும் தவறாக நினைக்க கூடாது என்று  நினைக்கிறார். எழில் சொல்லி இருந்தால் பாக்கியாவும் கோபிக்கு டைவர்ஸ் கொடுத்து இருக்க மாட்டார், கோபியும் இப்போது வீட்டை விட்டு போக வேண்டிய சூழ்நிலை வந்து இருக்காது என்பது அவர்களின் எண்ணம். ஆனால் தனது அம்மாவை அப்பா ஏமாற்றி விட்டார் என்ற ஆதங்கத்தில் எழில் இருக்கிறார். இதை புரிந்து கொள்ள மொத்த குடும்பமும் மறந்து விடுகின்றனர். இன்றைய எபிசோடின் முடிவில் ஈஸ்வரி பாட்டி இனிமேல் எழிலிடம் பேசவே மாட்டேன் என்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி