பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் மூர்த்தி, பாக்கியா குடும்பத்திடம் மொத்த உண்மையும் சொல்வாரா? என மிகப் பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இத்தனை நாட்களாக ராதிகா விவாகரத்தில் மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி வந்தார் கோபி. கோபியின் நாடகம் அவரின் அப்பா ராமமூர்த்திக்கு மட்டுமே தெரியும். அவரும் உண்மையை சொல்ல வரும் நேரத்தில் தான் விபத்து நடந்தது. தற்போது அவரும் பேச முடியாமல் இருக்கிறார். கோபியின் நல்ல நேரம், எல்லா டைமும் தப்பித்து விடுவார். இப்படி இருக்கையில் மகா சங்கமம் எபிசோடில் வீட்டுக்கு வந்து இருக்கும் மூர்த்தியிடம் கோபி மாட்டிக் கொண்டார்.
இவருக்கு இதே வேலை தான்.. பிரபல சீரியல் நடிகையை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்! ஏன்?
ராதிகாவும் கோபியும் நெருக்கமாக பேசி கொண்டிருப்பதை மூர்த்தி பார்த்து விட்டார். இதுப்பற்றி தனத்திடம் சொன்னார். தனமும் மூர்த்தியும் ராதிகா வீட்டுகு சென்று, ராதிகா கல்யாணம் செய்து கொள்ள போகும் நபரை பற்றி விசாரிக்கிறார்கள். அது கோபி என்பது அவர்களுக்கு தெரிந்து விடுகிறது. இருவரும் மிகப் பெரிய அதிர்ச்சியில் வீடு திரும்புகிறார்கள். இப்படி இருக்கையில், இன்றைய எபிசோடில் கோபி பற்றிய உண்மையை பாக்கியாவிடம் சொல்லி விடலாம் என்கிறார் மூர்த்தி. ஆனால் தனம் அதை தடுக்கிறார்.
அதுமட்டுமில்லை, பாக்கியாவிடம் கோபி பற்றி விசாரிக்கிறார். அப்போது தான் முதன்முறையாக பாக்கியா மனமுடைந்து எல்லா உண்மையும் சொல்கிறார். கோபிக்கு தன்னை பிடிக்காது என்றும் பாக்கியா கூறி அழ, தனத்திற்கு கஷ்டமாககி விடுகிறது. இப்போது கோபியை பற்றி சொன்னால், பாக்கியா தாங்க மாட்டார் என நினைக்கிறார்.
பிக் பாஸ் வருண் – அக்ஷராவுக்கு திருமணமா? ஷாக்கான ரசிகர்கள்!
அதே போல் புரமோவில் காட்டியப்படி மூர்த்தி .கோபியிடம் இதை பற்றி பேசுகிறார். கோபி ஏதோ ஏதோ காரணங்கள் சொல்லி சமாளிக்கிறார். கடைசியில் மூர்த்திக்கும் கோபிக்கும் சண்டை வருகிறது. ரசிகர்கள், கோபத்தில் மூர்த்தி மொத்த உண்மையையும் போட்டு உடைப்பார் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதுதான் இல்லை . கோபி பற்றிய உண்மையை குடும்ப அமைதிக்காக மூர்த்தியும் தனமும் மறைத்து விடுகின்றனர். வழக்கம் போல் கோபி எஸ்கேப் ஆகிவிடுகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.