பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி முன்பு சரமாரியான கேள்விகளை முன் வைக்கிறார் பாக்கியா. கையும் களவுமாக மாட்டிக் கொண்ட கோபி, பாக்கியாவிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை.
கோபிக்கு விபத்து நடந்த பின்பு பாக்கியா - ராதிகா இருவருக்கும் ஃபோன் போகிறது. இது தான் இவ்வளவு பெரிய குழப்பத்துக்கும் காரணம். இருவரும் பதறி துடித்து ஆஸ்பிட்டல் வருகின்றனர். ராதிகா, பாக்கியாவை கவனித்து இருந்தால் உஷார் ஆகி இருப்பார். ஏனென்றால் அவருக்கு கோபியின் மனைவி தான் பாக்கியா என்பது தெரியும். ஆனால் பாக்கியாவுக்கு ராதிகா பற்றி தெரியாது. இதனால் பிரச்சனை வெடிக்கிறது. ராதிகா கையை பிடித்து கொண்டு கோபி பேசியதை பாக்கியா பார்த்து விட்டார். கதறி அழுகிறார், துடிக்கிறார். இருவரின் துரோகத்தையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சக்தியுடன் வருணை சேர்த்து வைக்க கார்த்திக் கிருஷ்ணா படும் கஷ்டம்!
வீட்டுக்கு வருபவர், இதற்கு ஒரு மிகப் பெரிய முடிவு கட்ட வேண்டும் என ஆத்திரத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார். ஆஸ்பிட்டலில் கோபியை பார்க்க போன எழில், ஈஸ்வரி அம்மா, இனியா, செழியன் எல்லோரும் பாக்கியாவுக்கு ஃபோன் செய்கின்றனர். ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என வருகிறது. அப்போது அங்கு இருக்கும் நர்ஸ் கோபியின் மனைவி ஏற்கனவே வந்து , பில் எல்லாம் கட்டி விட்டார் என்கிறார். உடனே எல்லோரும் அது பாக்கியா தான் என நினைத்து விடுகின்றனர்.
இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வரும் கோபிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. பாக்கியா, கோபியை நடு ஹாலில் நிக்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். உங்களுக்கு இருக்கும் உறவு பற்றி நீங்கள் சொல்கிறீர்களா? இல்லை நான் சொல்லட்டுமா என கேட்க, கோபியிடம் பதில் இல்லை. அப்போது தான் பாக்கியாவுக்கு எல்லா உண்மையும் தெரிந்தது என்ற விஷயம் கோபிக்கு புரிய வருகிறது. திகைத்து நிற்கிறார்.
சொன்னதை செய்த பிரபல இசையமைப்பாளர்.. சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு கொடுத்த வாய்ப்பு!
ஈஸ்வரி அம்மா பாக்கியாவிடம் தெளிவாக பேசு என கேட்க, மொத்த உண்மையையும் கொட்டி தீர்க்கிறார் பாக்கியா. ராதிகாவுக்கும் கோபிக்கும் இருக்கும் உறவை பற்றி பாக்கியா சொன்னதும், ஈஸ்வரி அம்மாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதிர்ச்சியில் உறைகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்பாகும். ஹாட் ஸ்டார் பிரைம் வாடிக்கையாளர்கள் மட்டும் டெலிகாஸ்டுக்கு முன்பே இந்த எபிசோடை ஆப்பில் பார்த்துக் கொள்ளலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.