Home /News /entertainment /

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த ட்விஸ்ட். கோபி பற்றிய உண்மையை கண்டுப்பிடிக்கும் எழில்!

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த ட்விஸ்ட். கோபி பற்றிய உண்மையை கண்டுப்பிடிக்கும் எழில்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலை இயக்குனர் மின்னல் வேகத்தில் எடுத்து செல்கிறார். கோபி பற்றிய உண்மை எழிலுக்கு தெரிந்து விட்டது.

    பாக்கியலட்சுமி சீரியலில் கோபி - ராதிகா பற்றிய உண்மையை கிட்டத்தட்ட எழில் கண்டுப்பிடிக்கும் கட்டத்திற்கு வந்து விட்டார். ரசிகர்களின் ஆர்வத்தை தூண்ட இயக்குனரும் சீரியலை மின்னல் வேகத்தில் எடுத்து செல்கிறார்.

    கோபி - ராதிகாவின் நெருக்கம் இன்னும் பல பிரச்சனைகளை கொண்டு வரப்போகிறது. ஏற்கெனவே கோபியிடம் எழில் இதைப்பற்றி பேசினார். அந்த பெண் ராதிகா தான் என்பது எழிலுக்கு தெரியாது. ஆனால் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது மட்டும் தெரியும். ஒருவேளை இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரிந்தால் குடும்பத்தில் மிகப் பெரிய பிரச்சனை வெடிக்கும் என்பதால் யாரிடமும் சொல்லாமல் மறைக்கிறார். அதே நேரம், தாத்தா ராமமூர்த்தியிடம் இதுப்பற்றி மனம் விட்டு பேசி அழுகிறார் எழில்.

    என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகணும்.. வருத்தப்பட்ட ராஜா ராணி 2 அர்ச்சனா அம்மா!

    நேற்றைய எபிசோடில் இந்த காட்சிகள் இடம்பெற்று இருந்தன. எழில் பேசிவிட்டு வேலைக்கு கிளம்பி சென்றார். இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட நினைத்த கோபி அப்பா, கோபி - பாக்கியா இருக்கும் ஃபேமலி ஃபோட்டோவை ராதிகாவிடம் காட்ட முடிவு எடுத்து, நடக்க முடியாமல் நடந்து சென்றார். ஆனால் ராதிகாவோ அவசர அவசரமாக புது வீட்டுக்கு குடி போக கிளம்பி கொண்டிருந்தார். இந்த பிளானும் கோபி தந்தது தான். ராதிகா பக்கத்தில் இருப்பது பிரச்சனை தான் என பிளான் பண்ணி ராதிகாவை தூரமாக அழைத்து செல்கிறார்.

    பழைய சாதத்தை வைத்து சாஃப்டான சப்பாத்தி… இதையும் ஒருமுறை ட்ரை பண்ணுங்க!

    இந்நிலையில் தாத்தா, ஃபோட்டோவை எடுத்துக் கொண்டு ராதிகா வீட்டுக்கு வர, மொத்த குடும்பமும் தாத்தாவை வீட்டில் காணவில்லை என தேடுகின்றனர். ஈஸ்வரி பாட்டி ஒருபக்கம் அழ தொடங்கி விடுகிறார். இதனால் பாக்கியா, செல்வி அக்கா, செழியன் என அனைவரும் தேட, தாத்தா ராதிகா வீட்டு தெரு வரை நெருங்கி விட்டார். ஆனால் அதற்குள் கல் தடுக்கி கீழே விழுந்து விடுகிறார். கோபியும் ராதிகாவும் வீட்டை காலி செய்துவிட்டு காரில் அங்கிருந்து கிளம்புகிறார்கள். ரோட்டில் தாத்தா விழுந்து கிடக்க, செல்வி அக்காவும், பாக்கியாவும் அவரை பார்த்து விடுகின்றனர். உடனே அந்த இடத்திற்கு செழியன் வர தாத்தாவை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து வருகின்றனர்.



    அதே நேரம், தாத்தா கோபி - பாக்கியா ஃபேமலி ஃபோட்டோவை கையில் கொண்டு வந்து இருப்பதை எழில் கவனிக்கிறார். அவருக்கு லேசாக சந்தேகம் வர, தாத்தாவிடம் ஃபோட்டோவை கொண்டு போய் நேராக கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். ஒருவேளை ராதிகா தான் அந்த பெண் என்ற உண்மையை தாத்தா எழிலிடம் சொல்லிவிட்டால் சிரியலில் மிகப் பெரிய ட்விஸ்ட் இதுவாக தான் இருக்கும். என்ன சொல்வார் என்பது நாளைய எபிசோடில் தான் தெரிய வரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி