ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ராதிகா எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டாங்க.. கோபிக்கு பாக்கியா கொடுத்த ஷாக்!

ராதிகா எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டாங்க.. கோபிக்கு பாக்கியா கொடுத்த ஷாக்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா எல்லா உண்மையும் சொல்லிவிட்டாரா? என பயந்து நடுங்குகிறார் கோபி .

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபிக்கு அடுத்த அதிர்ச்சி தருகிறார் பாக்கியா. ஏற்கெனவே ராஜேஷ் உடன் சண்டை போட்ட கோபிக்கு பாக்கியா சொல்லும் தகவல் இடி போல் விழுகிறது.

  பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவிடம் மாட்டிய பின்பு திரைக்கதையில் தினமும் ஒரு ட்விஸ்ட் அரங்கேறி வருகிறது. பாக்கியாவின் கணவர் தான் கோபி என்று தெரிந்த பின்பு ராதிகா கோபியை ஏற்றுக் கொள்வதாக இல்லை. டீச்சருக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது என்கிறார். ஆனால் கோபி பரவாயில்லை எனக்கு ராதிகா தான் வேண்டும் என அடம்பிடிக்கிறார். தினமும் ராதிகா வீட்டுக்கு செல்வது, அவரை சமாதானம் செய்ய நினைப்பது, மயூவிடம் பேசுவது என கோபி என்ன தான் நடிச்சாலும் ராதிகா அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. ராதிகாவின் அம்மா மட்டும் கோபிக்கு துணையாக இருக்கிறார். அவர் ராதிகாவிடம் கோபிக்காக சப்போர்ட் செய்து பேசுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக ராதிகாவின் மனசை மாற்றவும் முயற்சி செய்கிறார்.

  அடுத்த 1 வாரத்திற்கு ட்ரெண்டிங்கில் இருக்க போவது பிக் பாஸ் ஷிவானி தான்!

  இந்நிலையில் இன்றைய எபிசோடில் ராதிகா பற்றி கோபியிடம் பேசுகிறார் பாக்கியா. ராதிகாவிடம் இத்தனை நாட்களாக பழகி இருந்தவர் அவரின் குடும்பத்தை ஏமாற்றி ராதிகாவிடம் பழகுகிறார் என்ற அதிர்ச்சி தகவலை பாக்கியா சொல்ல கோபிக்கு பயம் வந்து விடுகிறார். தன் மீது இருக்கும் கோபத்தில் ராதிகா எல்லா உண்மையும் சொல்லிவிட்டாரா? என பயந்து நடுங்குகிறார்.

  ரஜினி பட நடிகைக்கு இப்படியொரு நிலைமையா! சோப்பு விற்பதாக அவரே சொன்ன தகவல்

  ஆனால் கடைசியில் பாக்கியா,  ராதிகா என்னிடம் எல்லா விஷயத்தையும் சொன்னார். அந்த நபர் தான் யார் என்று கடைசி வரை சொல்லவில்லை. அவர் நல்லா இருக்க வேண்டும், இந்த திருமணம் ஆவது அவருக்கு சரியாக அமைய வேண்டும் என நினைத்தேன் என்கிறார். கோபி, அப்பாடா! ஒருவழியா தப்பித்தேன் என நிம்மதி பெருமூச்சு விடுகிறார்.

  அதுமட்டுமில்லை இன்றைய எபிசோடில் ராதிகாவை தேடி போலீஸ் வீட்டுக்கு வருகிறது. அவர் மீது ராஜேஷ்  புகார் கொடுக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv