Home /News /entertainment /

பாக்கியாவிடம் வசமாக மாட்டிக் கொண்ட கோபி.. பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த பரபரப்பு!

பாக்கியாவிடம் வசமாக மாட்டிக் கொண்ட கோபி.. பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த பரபரப்பு!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

கோபியின் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார். கோபி வழக்கம் போல் பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறார்

    பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் ஏமாற்று வேலை  முடிவுக்கு வந்து விட்டது. ஒரே நேரத்தில் பாக்கியா, ராதிகா என இருவரிடமும் பொய் பேசி வந்த கோபி, பாக்கியாவிடம் மாட்டிக் கொள்வது போல் இன்றைய புரமோ வெளியாகியுள்ளது.

    சின்னதிரையில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களை கவர்ந்தவையாக இருந்து வருகின்றன. சீரியல்களின் கதைகளமும், அதில் திறம்பட நடிக்கும் நடிகர்களாலும் பல சீரியல்கள் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்து உள்ளன. அந்த வகையில் ஸ்டார் விஜய் டிவி-யில் பல ஹிட் சீரியல்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன. பிற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விட வித்தியாசமான கதையம்சம் கொண்ட சீரியல்கள் விஜய் டிவி-யில் அதிகம் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக விஜய் டிவி-யில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது.

    இதையும் படிங்க.. மாமியாருடன் சண்டை போட்ட சீரியல் நடிகை.. வெளியானது வீடியோ! கடைசியில் தான் ட்விஸ்டே இருக்கு

    பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் கதை என்ற ஒன்லைனில் ஒளிபரப்பாக தொடங்கியது. ஆரம்பத்தில் டி.ஆர்.பி ரேசில் மெதுவாக சென்று கொண்டிருந்த சீரியலின் வேகத்தை கோபி - ராதிகா ட்ராக் மின்னல் வேகத்தில் கொண்டு சென்றது. பாக்கியாவை பிடிக்கவில்லை என்றாலும் குடும்பத்திற்காக, பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழ்கிறார். அதே போல் முன்னாள் காதலி ராதிகாவையும் அவரால் மறக்க முடியவில்லை. கதை இப்படியே பயணித்துக் கொண்டிருக்க கோபி யாரிடமும் மாட்டுவதாக தெரியவில்லை.

    இதையும் படிங்க.. 2 வது பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறலாம்.. எப்படி? முழு விபரம்!

    இந்த நேரத்தில் தான் பாக்கியாவை டைவர்ஸ் செய்துவிட்டு ராதிகவுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்து விட்டார் கோபி. ஏற்கெனவே ராதிகாவுக்கு டைவர்ஸ் கிடைத்துவிட்டது. கோபிக்கு டைவர்ஸ் கிடைத்தால் அடுத்தது கல்யாணம், தான் என கனவு கண்டு வருகிறார் ராதிகா.இதனால் அவசர அவசரமாக பாக்கியாவிடம் இருந்து டைவர்ஸ் வாங்க வேண்டும்ம் என முடிவு எடுத்த கோபி, பாக்கியாவிடம் பொய் சொல்லி கோர்டுக்கு அழைத்து செல்கிறார். கோர்டுக்கு போன பிறகு கூட பாக்கியாவிடம் இது பிசினஸ் விஷயம் என்று பொய் மேல் பொய் சொல்லி நம்ப வைக்கிறார்.



    இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புரமோவில் கோபி மாட்டிக் கொள்வது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதாவது, நீதிபதி பாக்கியாவிடம் இது விவாகரத்து வழக்கு என்று கூற பாக்கியா அதிர்ச்சி ஆகிறார். பின்பு கோபியின் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார். கோபி வழக்கம் போல் பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறார். இந்த காட்சிகள் அடங்கிய புரமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனாலும் ரசிகர்கள் இது கனவாக இருக்கும் என கணித்துள்ளனர். கோபி தற்போதைக்கு மாட்ட வாய்ப்பே இல்லை எனவும் அவர் யோகித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி