Home /News /entertainment /

கோர்டில் வைத்து கோபியை அசிங்கப்படுத்தும் பாக்கியா.. ஒருவழியா விவாகரத்து கிடைச்சிடுச்சு!

கோர்டில் வைத்து கோபியை அசிங்கப்படுத்தும் பாக்கியா.. ஒருவழியா விவாகரத்து கிடைச்சிடுச்சு!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் கோர்டுக்கு செல்லும் பாக்கியா விவாகரத்துக்கு ஓகே என்கிறார்.

    பாக்கியலட்சுமி சீரியல் மீண்டும் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. பரபரப்பான விவாகரத்து சீன் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    சின்னத்திரை டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கோபி கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பின்பு பாக்கியா வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். மொத்த குடும்பமும் கோபியை திட்டி தீர்த்தனர். சரி, இப்போதாவது செய்த தவறை கோபி உணர்வார் என நினைத்தால் கடைசியில் மறுபடியும் குடும்பத்தை ஏமாற்ற பிளான் செய்கிறார் கோபி. அதாவது இப்போதைக்கு பொய் சொல்லி பாக்கியாவை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டு மீண்டும் அவருக்கு டைவர்ஸ் கொடுத்துவிட்டு ராதிகாவுடன் சேர்ந்து விடலாம் என நினைக்கிறார்.



    வாவ் சொல்ல வைக்கும் எதிர் நீச்சல் ஈஸ்வரி!

    இந்த பிளான் படி பாக்கியாவிடம் போய் பேசுகிறார். கடைசியில் அங்கும் விதி விளையாட சத்தியம் செய்யும் போது கூட ராதிகா பெயர் வந்து விடுகிறது. பாக்கியா உடைந்து போகிறார். இனிமேல் கோபியுடன் வாழ்ந்தால் அது சரியாக வராது என முடிவு எடுக்கிறார். மறுநாள் வீட்டுக்கு வந்து கோர்டுக்கு  செல்ல இருப்பதாக கூறுகிறார். அதாவது கோபி - பாக்கியா டைவர்ஸ் வழக்கு விசாரணைக்கு வருகிறது அங்கு போய் விவாகரத்திற்கு சம்மதம் என கூற போவதாக சொல்கிறார்.

    கண்ணு பட போகுது ஆங்கர் ரக்‌ஷன்.. லைக்ஸ் அள்ளும் ஃபோட்டோஸ்!

    ஈஸ்வரி அம்மா, ராமமூர்த்தி தாத்தா, செழியன் என எல்லோரும் வேண்டாம் என்கின்றனர். ஆனால் பாக்கியா யார் பேச்சையும் கேட்கும் நிலைமையில் இல்லை. பாக்கியாவுக்கு துணையாக நிற்கிறார் எழில். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரமோ வெளியாகியுள்ளது. கோர்டுக்கு செல்லும் பாக்கியா விவாகரத்துக்கு ஓகே என்கிறார். ஆனால் கோபியை மட்டம் தட்டி சுய மரியாதை. கெளரவம், ஏமாற்றம் பற்றி  பேசி தக்க பதிலடி கொடுக்கிறார்.



    பாக்கியாவின் பேச்ச்சில் இருக்கும் தெளிவை நீதிபதி கவனிக்கிறார். கடைசியில் இருவரும் கேட்டப்படி டைவர்ஸ் தர உத்தரவிடுகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி