Home /News /entertainment /

முக்கிய முடிவு எடுக்கும் பாக்கியா.. பாக்கியலட்சுமி தொடரில் அடுத்த திருப்பம்!

முக்கிய முடிவு எடுக்கும் பாக்கியா.. பாக்கியலட்சுமி தொடரில் அடுத்த திருப்பம்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மற்றும் செழியனின் வாயை பணத்தால் மூட பாக்கியா ஒரு முக்கிய எடுக்க போகிறார்.

  சீரியல் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரெட் லிஸ்டில் சேர்ந்துள்ள பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்களுக்கு அடுத்த வாரம் சூப்பரனான ட்விஸ்ட் காத்துக் கொண்டிருக்கிறது.

  ஸ்டார் விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான பாக்கியலட்சுமி தொடரின் கதைக்களம் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிக்கும் நடிகை சுசித்ரா ஷெட்டி சீரியலில் இருந்து விலக போவதாக பல யூடியூப் சேனல்களில் செய்திகள் உலா வந்தாலும் ரசிகர்கள் அதை நம்புவதாக்தெரியவில்லை. அந்த அளவுக்கு பாக்கியாவை தனது வீட்டு பெண்ணாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அவர் சீரியலை விட்டு செல்ல மாட்டார் என்று அடித்துக் கூறுகின்றனர். அதே போல் தான் கோபியாக நடிக்கும் சதீஷ்-க்கும் ஏகப்பட்ட ஃபேன்ஸ் கூட்டம் இருக்கிறது.

  கோபி ரோலை இவரை தவிர வேற யாரும் இவ்வளவு சிறப்பாக நடிக்க முடியாது என்கின்றனர் ரசிகர்கள்.முன்னாள் காதலியுடன் நெருக்கம், 2 வது திருமணம் செய்து கொள்ள ஆசை அதற்காக விவாகரத்து என பாக்கியலட்சுமி சீரியல் கடந்த சில மாதங்களாக பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதிலும் முக்கியமாக கோபி, பாக்கியாவை ஏமாற்றி கோர்ட் வரை அழைத்து சென்ற எபிசோடுகள் டி.ஆர்.பியில் ஹிட் அடித்தனர். இன்னும் சில நாட்களில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பாக்கியா சீரியல் ஓவர் டேக் செய்துவிடும் என்கின்றனர் ரசிகர்கள்.

  இதையும் படிங்க.. விஜய் டிவியில் மீண்டும் பிக் பாஸ் ராஜூ.. அந்த சீரியலில் திரும்பவும் வர போகிறாரா?

  இதுவரை வெளியான தகவலின் படி கோபி, ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். அந்த காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக அந்த புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் , வரும் வாரம் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு அதிரடியான திருப்பம் காத்துக் கொண்டிருக்கிறது. தற்போது பாக்கியா வீட்டில் பணப்பிரச்சனை மிகப் பெரிய பிரச்சனையாக வெடித்து விட்டது. இன்றைய எபிசோடில் கூட அதுதான் நடந்தது. ஜெனி அவரின் அப்பாவிடம் பணம் கேட்க, அந்த விஷயம் செழியனுக்கு தெரிய வர வீட்டில் சண்டை வெடிக்கிறது. செழியன், பாக்கியாவிடம் கோபத்தை காட்ட, அம்மாவுக்கு சப்போர்ட்டாக எழில் வர, கடைசியில் அண்ணனும் தம்பியும் அடித்துக் கொள்கிறார்கள். இதை பார்த்து ஈஸ்வரி அம்மாவும் ராமமூர்த்தி சாரும் வறுத்தப்படுகிறார்கள்.

  இதையும் படிங்க.. சிவகாமி அம்மாவா இப்படி? சந்தியா சரவணனுக்கு அடுத்த பிரச்சனை ரெடி!

  குடும்பத்தில் பண கஷ்டம் பேய் போல் ஆடிப்படைப்பதாக நினைத்து வருத்தப்படுகிறார்கள். இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட, கோபி மற்றும் செழியனின் வாயை பணத்தால் மூட பாக்கியா ஒரு முக்கிய எடுக்க போகிறார். ஒரே நேரத்தில் 500 பேருக்கு சாப்பாடு ஆர்டர் எடுத்து அதை வெற்றிக்கரமாக செய்து கொடுத்து வீட்டில் நடக்கும் பணப்பிரச்சனைக்கு முடிவு கட்டுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகள் அடுத்த வார எபிசோடில் இடம்பெறும் எனவும் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial, Vijay tv

  அடுத்த செய்தி