விஜய் டிவியின் டாப் ரேட்டிங்கில் உள்ள சீரியல் பாக்கியலட்சுமி. இதில் எழில் என்ற கேரக்டரில் நடித்து வரும் விஜே விஷாலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அம்மா மீது பாசத்தை பொழியும் எழிலாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்துள்ளார் விஷால். இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் மற்றொரு பாப்புலர் சீரியலில் நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
விஜய் டிவியை பொறுத்தவரையில் திறமை இருந்தால் போதும். அவர்கள் தானாகவே ஜொலிக்க தொடங்கி விடுவார்கள். ஒருமுறை அவர்களின் முகம் விஜய் டிவியில் வந்து விட்டாலே போதும் அடுத்த சில மாதங்களிலே அவர்கள் செலபிரிட்டிகள் தான். அந்த வகையில் விஜய் டிவியில் உதவி இயக்குனராக, போட்டியாளராக கேமராவுக்கு பின்பே முகத்தை காட்டி கொண்டிருந்த விஜே விஷால் முதன் முறையாக சீரியல் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். தற்போது பாக்கியலட்சுமி சீரியல் அவருக்கு பெரும் பெயரையும் புகழையும் சம்பாத்தி கொடுத்துள்ளது. சின்னத்திரை உலகில் இளம் நாயகனாக வலம் வருகிறார்.
வருங்கால மனைவியின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய சீரியல் நடிகர்!
விஷால் ஒரு டான்ஸரும் கூட. ஆன்கராக வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய்டிவிக்கு வந்துள்ளார்.அதன்பிறகு விஜய் டிவியின் “அது இது எது” மற்றும் “கலக்கல் சாம்பியன்ஸ்” போன்ற நிகழ்ச்சிகளில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதன் தொடர்ச்சியாக , விஜய் டிவியின் டான்ஸ் ஷோவில் கலந்துகொண்டார். டான்ஸராக அவருக்கு நல்ல பெயர் கொடுத்தது இந்த ஷோதான். சீரியலுக்கு அடுத்தபடியாக ’இதுநாள் வரை’ என்கிற குறும்படத்திலும் நடித்துள்ளர்.
பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமாகும் பிரபல சீரியல் நடிகர்! அதுவும் யாருக்கு ஜோடி தெரியுமா?
அதன் பின்பு தான் விஷாலுக்கு பாக்கியலட்சுமி எழில் ஆஃபர் கிடைத்தது. அம்மாவின் பாச போராட்டம் தான் பாக்கியலட்சுமி சீரியலின் கதை. எட்டு பேர் கொண்ட பாக்கியலட்சுமி குடும்பத்தில் அம்மா பாக்கியலட்சுமியின் செல்ல மகனாக எழில் நடித்து வருகிறார். கதைப்படி தற்போது எழிலுக்கு கோபிக்கு வேறோரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிந்து விட்டது. அது யார்? என்று கண்டுப்பிடிக்கும் பணியில் இருக்கிறார்.
இந்நிலையில் ஒருபக்கம் பாக்கியலட்சுமி சீரியலில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் விஷால், அதே விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன. ஆனால் இதுக் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளிவராத நிலையில் இது கெஸ்ட் ரோலாக இருக்கக்கூடும் எனவும் ரசிகர்கள் கணித்துள்ளனர்.
தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த நெடுந்தொடர் ஆகும். இதில் தற்சமயம் பவித்ரா ஜனனி மற்றும் வினோத் பாபு நடித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.