• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • காதல் கைக்கூடிய மகிழ்ச்சி... ஆட்டம், பாட்டம் என களைக்கட்டிய சஹானாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி!

காதல் கைக்கூடிய மகிழ்ச்சி... ஆட்டம், பாட்டம் என களைக்கட்டிய சஹானாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி!

சஹானா திருமண வரவேற்பு

சஹானா திருமண வரவேற்பு

தடபுடலாக சஹானாவின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

  • Share this:
    அழகு சீரியலில் நடிகை ரேவதியின் மகளாக நடித்த சஹானாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகியுள்ளது.

    பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்த சஹானா, சன் டிவியில் ஒளிரப்பான அழகு சீரியலில் வெள்ளித்திரை நட்சத்திரங்களான நடிகை ரேவதி - தலைவாசல் விஜய் தம்பதியின் மகளாக நடித்திருந்தார். திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார். கதை சொல்லும்போது, தன்னுடைய கதாப்பாத்திரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் இருப்பதுபோல் கூறினார்கள். ஆனால், எபிசோடுகள் போகப்போக, தனது கதாப்பாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் சீரியலில் இருந்து விலகிவிட்டேன் என விளக்கம் கொடுத்திருந்தார்.

    பின்னர், கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வருகிறார். அவருக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர் அபிஷேக்குக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு காதலருடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும், முத்தம் கொடுத்துக்கொள்ளும் ரொமான்ஸ் வீடியோக்களையும், அவர் ஏற்கனவே இன்ஸ்டாவில் பதிவேற்றியிருந்தார். திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே காலருடன் ரொமான்ஸ் செய்து கொண்டு, அதனை சமூகவலைதளத்தில் பதிவிடலாமா? என்றெல்லாம் சிலர் கேள்வி எழுப்பினாலும், அவருடைய ரசிகர்கள் சஹானாவையும், அவரது கணவரையும் வாழ்த்தினர்.இருவரும் நெருக்கமாக அந்த வீடியோவில் இருந்ததால், இன்ஸ்டாகிராமிலும் அந்த வீடியோ வைரலாக பரவியது. தற்போது, சஹானாவின் வரவேற்பு நிகழ்ச்சி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. திருமணமும், வரவேற்பு நிகழ்ச்சியும் தடபுடலாக நடைபெற்றுள்ளது. திருமண மண்டபம் பிரம்மாண்டமாக அலங்கார செய்யப்பட்டு, தோரணைகளாலும், மின் விளக்குகளாலும் ஜொலிக்கின்றது.

    also read.. முல்லை மனசு யாருக்கு வரும்! ரோட்டில் நிற்கும் கண்ணன் -ஐஸ்வர்யாவுக்கு யாரு வழியா உதவி பண்றாங்க பாருங்க!

    கண்களைப் பறிக்கும் வகையில் சஹானாவும் - அபிஷேக்கும் நேர்த்தியாக உடையணிந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தம்பதிகளை மனதார வாழ்த்தியுள்ளனர். இடையே சின்னக் குழந்தைகள் நடனமாடி, தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். அப்போது சஹானாவும் - அபிஷேக்கும் திடீரென நடனமாடுகின்றனர்.



    இதனைப் பார்த்த உறவினர்கள், வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மகிழ்ச்சியாக கைதட்டி தம்பதிகளை உற்சாகப்படுத்தியுள்ளனர். பின்னர், தம்பதிகளுக்கான பிரத்யேக ஃபோட்டோ ஷூட் நடக்கிறது. கணவர் அபிஷேக், நடிகை சஹானாவுக்கு நெற்றியில் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்துகிறார். இப்படி, தடபுடலாக சஹானாவின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

    இந்த வீடியோவைப் பார்த்த சஹானாவின் ரசிகர்கள், திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் அவரை மனதார வாழ்த்துவதாக தெரிவித்துள்ளனர். மேலும், திருமணம் செய்துவிட்டதால் நடிப்புக்கு டாட்டா Bye Bye சொல்லாமல் தொடர்ந்து நடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பகல் நிலவு சீரியலில் சஹானா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதன் வழியாக அழகு சீரியலில் நடித்த அவருக்கும் மக்களிடையேவும் நல்ல அறிமுகம் கிடைத்திருந்தது. திடீரென பாதியில் அவர் வெளியேறியதால், ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தாலும், கண்ணாண கண்ணே சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து, தனது ரசிகர்களின் ஏக்கத்தை போக்கினார். சஹானா திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: