ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் அசீம் அந்த நடிகையை எப்படி திட்டினார் தெரியுமா? உண்மையை உடைத்த பிரபலம்!

பிக் பாஸ் அசீம் அந்த நடிகையை எப்படி திட்டினார் தெரியுமா? உண்மையை உடைத்த பிரபலம்!

பிக் பாஸ் அசீம்

பிக் பாஸ் அசீம்

” ஐதராபாத்தில் இருந்து வந்தால் நீ பெரிய நடிகையா? என்றெல்லாம்  அசீம் மரியாதை இல்லாமல் பேசினார் “

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக் பாஸ் 6 அசீம் குறித்து நடிகை தேவிப்பிரியா பல அதிர்ச்சி விஷயங்களை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

  பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக களம் இறங்கி இருக்கும் அசீம் ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளார். கமல்ஹாசனே, அவரை கண்டித்து விட்டார். ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்டுகள் அசீமை சுற்றி வருகின்றன. பிக் பாஸ் வீட்டிலும் சரி வெளியிலும் சரி அசீம் நிறைய ஹேட்டர்ஸ்களை சம்பாத்தி விட்டார்.

  அதே சமயம் அவருக்கு ஆதரவாக சில ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஏற்கெனவே திருமணம் ஆகி அது விவாகரத்தில் முடிந்து தனது மகனுக்காக தான் பிக் பாஸ் வந்ததாக அசீம் கூறி இருந்தார். அதனால் அசீம் செய்த தவறை சுட்டிக்காட்ட நினைத்த கமல், அவரின் மகன் பற்றியும் பேசி இருந்தார். அந்த வார எபிசோடுக்கு பின்பு அசீம் நடவடிக்கையில் சில மாற்றங்களையும் பார்க்க முடிகிறது.

  azeem serial poove unakkaga villi devi priya shares about bigg boss mohammed azeem real character
  பூவே உனக்காக சீரியல்

  இந்நிலையில் அசீமுடன் சன் டிவி  சீரியலில் சேர்ந்து நடித்த நடிகை தேவிப்பிரியா சமீபத்தில் அளித்த பேட்டியில் அசீம் பற்றி  நிறைய விஷயங்களை பேசி உள்ளார். சன் டிவியில் ஒளிப்பரப்பான பூவே உனக்காக சீரியலில் தேவிப்பிரியா வில்லி ரோலில் நடித்து இருந்தார். ஆரம்பத்தில் இந்த சீரியலில் கதிர் ரோலில் நடிகர் அருண் நடித்து வந்தார்.அவர் சீரியலில் இருந்து விலகிய பின்பு அசீம் அந்த ரோலில் நடிக்க தொடங்கினார்.

  azeem serial poove unakkaga villi devi priya shares about bigg boss mohammed azeem real character
  நடிகை தேவிப்பிரியா

  அப்போது அந்த சீரியலில் நடித்த நடிகை ஒருவரிடம்  அசீம் சண்டை போட்டதாக தேவிப்பிரியா குறிப்பிட்டுள்ளார். அந்த நடிகை யார்? என்பதை அவர் குறிப்பிட விரும்பவில்லை.” அவருக்கு தமிழ் தெரியாது. அந்த நடிகை ஐதராபாத்தை சேர்ந்தவர். அவரிடம் அசீம் மிகவும் மோசமாக சண்டை போட்டார். செட்டில் இருந்த எல்லோரும் அந்த பெண்ணை தான் சமாதானம் செய்தார்கள். ஐதராபாத்தில் இருந்து வந்தால் நீ பெரிய நடிகையா? என்றெல்லாம்  அசீம் மரியாதை இல்லாமல் பேசினார். அப்போது அனைவரும் பிரச்சனை வேண்டாம் என அமைதியாக இருந்தோம். ஆனால் இப்போது அவர் அதே மாதிரி தனலட்சுமியை பேசியதற்கு ஆண்டவர் நல்ல அறிவுரை கொடுத்தார்” என்று தேவிப்பிரியா தெரிவித்துள்ளார்.

  இந்த பேட்டியை தொடர்ந்து அந்த நடிகை யாராக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக தேடி வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Sun TV, TV Serial