• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மனைவி மற்றும் மகளின் வாழ்த்துடன் சர்வைவர் ஷோவுக்கு சென்ற ஆயுத எழுத்து சக்தி!

மனைவி மற்றும் மகளின் வாழ்த்துடன் சர்வைவர் ஷோவுக்கு சென்ற ஆயுத எழுத்து சக்தி!

ஆயுத எழுத்து சக்தி

ஆயுத எழுத்து சக்தி

திரைப்படங்களில் நடித்தவரா இவர்? என ரசிகர்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர்

  • Share this:
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிரப்பாகி வரும் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களுள் ஒருவர் அம்சத்கான்.

    இந்த நிகழ்ச்சியை ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்குகிறார். சவாலான போட்டியாளராக இருக்கும் அம்சத்கான் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், சர்வைவர் தமிழ் மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரிட்சையமான முகமாக மாறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகே, திரைப்படங்களில் நடித்தவரா இவர்? என ரசிகர்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். பிட்னஸ் மீது அதிக ஆர்வம் உள்ள அம்சத்கான், தொழிலதிபராகவும் உள்ளார். அம்சத் கான் சேலத்தில் பிறந்தவர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அவர், ரஷீதா கான் என்பவரை திருமணம் செய்துள்ளார். ரஷீதா கான் ஹெச். ஆராக பணியாற்றியவர். இந்த அழகிய தம்பதிக்கு சாரா என்ற அழகிய பெண் குழந்தையும் உள்ளது.

    அம்சத் கான் எம்.பி.ஏ முடித்துள்ளார். படித்த முடித்த பிறகு சில கார்ப்பரேட் கம்பெனிகளில் பணியாற்றினார். பின்னர், அவரே தொழில் முனைவோராகவும் மாறினார். எம்.பி.ஏ முடித்துள்ளதால் பிஸ்னஸ் குறித்த அடிப்படை புரிதல் அவரிடம் இருந்துள்ளது. பல்வேறு கார்பரேட் கம்பெனிகளில் பணியாற்றிய அனுபவமும் இருந்ததால் தொழில் தொடங்கி, அதில் வெற்றிக் கண்டார். அதேநேரத்தில், தீவிரமாக முயற்சி செய்து திரைத்துறையிலும் காலடி எடுத்துவைத்தார்.திரைத்துறையில் நுழைவதற்கு முன்பு நாடகக் கலைஞராக பயிற்சி பெற்றுள்ளார். சென்னையில் உள்ள பிரபல நாடக குழுவில் இணைந்து நடிப்பு பயிற்சிகளைப் பெற்ற அம்சத்கான், மேடை நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். இந்த அனுபவம் அவரை திரைத்துறைக்குள் அழைத்து சென்றது.

    புகைப்படம் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இந்தப் படத்தில் அவர் கிருஷ்ணா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்துக்கு முன்பாக பல்வேறு குறும்படங்களிலும் நடித்தார். அதில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பின் அடிப்படையில் சினிமா துறையில் அவருக்கு தொடர்புகள் கிடைத்தது. பின்னர், வெள்ளித்திரையிலும் நுழைந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.வல்லினம் திரைப்படத்தில் கூடைப்பந்தாட்ட வீரர் குணா கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரம் அவருக்கு திரைத்துறையில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. நயன்தாரா நடித்த மாயா திரைப்படத்தில் ராம் என்ற கேரக்டரில் நடித்தார். நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கைதி திரைப்படத்திலும் ராம் என்ற கேரக்டரிலேயே நடித்து வரவேற்பை பெற்ற அவர், களம் திரைப்படத்தில் கௌதமாக நடித்தார்.

    வெள்ளித்திரையில் நடிப்பதற்கு முன்பு விஜய் டீவியில் ஒளிபரப்பான ‘ஆயுத எழுத்து’ சீரியலில் அம்சத்கான் நடித்தார். சக்தி என்ற கேரக்டரில் நடித்த அவர், திடீரென பாதியில் சீரியலில் இருந்து வெளியேறினார்.பிட்னஸூக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் அம்சத்கான், நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதை ஒருபோதும் தவிர்த்ததில்லை

    தொழில் முனைவோராகவும் இருக்கும் அம்சத்கான், சேலத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அதனை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.அம்சத்கான் சிறந்த பாக்சர். அவர் பாக்சிங் பயிற்சி பெற்றிருப்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: