முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கலர்ஸ் தமிழில் அதர்வாவின் குருதி ஆட்டம்!

கலர்ஸ் தமிழில் அதர்வாவின் குருதி ஆட்டம்!

குருதி ஆட்டம்

குருதி ஆட்டம்

சக்தி தனது நண்பனை கொன்றவர்களை பழிதீர்ப்பாரா எனும் கேள்வி கொண்ட இந்த கதைக்களம் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு அழைத்து செல்லும்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதர்வா நடிப்பில் வெளிவந்த சூப்பர்ஹிட் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான குருதி ஆட்டம் திரைப்படத்தை வரும் ஞாயிறன்று பிப்ரவரி 19 மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பார்த்து மகிழுங்கள்.

வயகாம்18 நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்த ஆக்‌ஷன் கலந்த பழிவாங்கும் கதையான குருதி ஆட்டம் திரைப்படத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 19 மதியம் 2 மணிக்கு உலகத் தொலைக்காட்சி பிரீமியராக ஒளிபரப்ப உள்ளது.

உணர்வுகள் மற்றும் சண்டைகள் கலந்த இந்த திரில்லர் திரைப்படத்தில் நடிகர் அதர்வா, நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வசீகரிக்கும் மெல்லிய பின்னணி இசை, படத்தில் உள்ள கபடி காட்சிகள், படத்தின் வசனங்கள், ஊர் மக்கள் இடையே இருக்கும் கிராமிய உரையாடல்கள் என அனைத்து சுவாரஸ்யங்களையும் கொண்ட ஒரு விறுவிறுப்பான குடும்ப திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஸ்ரீ கணேஷ் எழுதி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் ராதிகா சரத்குமார் வில்லியாக நடித்துள்ளார். அவருக்கு இணையாக நடிகர் ராதா ரவி மற்றும் வத்சன் சக்கரவர்த்தி படத்தில் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கின்றனர். இவர்களுடன் வினோத் சாகா, கண்ணா ரவி, பிரகாஷ் ராகவன், பாலஹாசன் ஆகியோர் துணை நடிகர்களாக நடித்திருக்கின்றனர்.

மதுரையில் ஒரு மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்ப்பவர் சக்திவேல் (நடிகர் அதர்வா). கபடி விளையாட்டில் சிறந்து விளங்கும் இவரது அணிக்கும் மதுரையையே ஆட்டிப் படைக்கும் நடிகை காந்திமதி (ராதிகாவின்) மகன் முத்துவிற்கும் (கண்ணா ரவி) இடையே கபடி விளையாட்டில் கடும் போட்டி ஏற்படுகிறது. முத்துவின் நெருங்கிய நண்பன் அறிவு (பிரகாஷ் ராகவன்). இவரது அப்பா துரை (ராதாரவி). ஒரு தியேட்டர் தகராறில் முத்துவின் நண்பர்களுக்கும், சக்திவேலுக்கும் கடுமையான சண்டை நடக்கிறது. சக்திவேலை பழி வாங்க அவரது வீட்டில் கஞ்சாவை வைத்து கைது செய்ய வைக்கிறார் அறிவு.

இதற்கிடையில் முத்து தனது நண்பன் அறிவுக்கு தெரியாமல் சக்திவேலை ஜாமீனில் எடுக்கிறார். இதனால், மருத்துவருடன் நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார் சக்தி. இருப்பினும் காந்திமதியையும், அவரது மகன் முத்துவையும் கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார் அறிவு. அப்போதுதான் தானும் தாதாவாக முடியும் என நினைக்கிறார். அதன்படி முத்துவை கொலை செய்கிறார். நண்பனைக் கொன்றவர்களை பழி வாங்கத் துடிக்கிறார் சக்தி. இறுதியில் சக்தி தனது நண்பனை கொன்றவர்களை பழிதீர்ப்பாரா எனும் கேள்வி கொண்ட இந்த கதைக்களம் பார்வையாளர்களை இருக்கையின் நுணிக்கு அழைத்து செல்லும்.

படம் குறித்து 8 தோட்டாக்கள் புகழ் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் கூறும் போது, “முழுமையான குடும்ப பொழுதுபோக்கிற்கான அனைத்து அம்சங்களையும் எலியும் பூனையுமாக துரத்தி கொண்டு செல்லும் கதைகளத்தை கலர்ஸ் தமிழ் பார்வையாளர்கள் பார்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். குருதி ஆட்டம் போன்ற வேகமான கதைக்களம் கொண்டு அந்த ஊர் மக்கள் வாழ்க்கையின் உரையாடல்கள் ஆகியவை பார்வையாளர்களால் நிச்சயமாக விரும்பப்படும். முக்கியமாக ராதிகா சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த ஆக்‌ஷன் கலந்த குடும்ப திரைக்கதையை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், பிப்ரவரி 19, ஞாயிறு மதியம் 2:00 மணிக்கு உங்கள் குடும்பத்தினருடன் கண்டு மகிழுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்