Vanitha Vijayakumar: வனிதா விஜயகுமார் மீண்டும் திருமணம்? அடித்து சொன்ன ஜோதிடர்

வனிதா விஜயகுமார்

அவரது வருங்கால கணவரின் பெயர் ’எஸ்’ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் என்றும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
    நடிகை வனிதா விஜயகுமாருக்கு 4-வது திருமணம் செய்துக் கொள்ளும் யோகம் ஜாதகத்தில் இருப்பதாக ஜோதிடர் ஒருவர் கணித்திருக்கிறார்.

    கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் 4' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை வனிதா விஜயகுமார், ரசிகர்களிடம் பிரபலமானார். 'பிக் பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியில் ஜட்ஜ் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து பாதியிலேயே விலகினார்.

    இந்நிலையில் சமீபத்தில் ஒரு யூ-ட்யூப் சேனலின் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதில் ஜோதிடர் குருஜி வனிதாவின் எதிர்காலத்தை கணித்துள்ளார். அதன்படி, வனிதா மீண்டும் திருமணம் செய்து கொள்வார் என்றும், அவரது வருங்கால கணவரின் பெயர் ’எஸ்’ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் என்றும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். மூன்று குழந்தைகளுக்கு தாயான வனிதா விஜயகுமார், கடைசியாக சினிமா டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார். அந்தத் திருமணம் 4 மாதங்கள் மட்டுமே நிலைத்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் அரசியலில் நுழைந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாதிரி வனிதாவாலும் வெற்றி பெற முடியும் எனவும் அந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: