40 கதை சர்ச்சையில் சிக்கிக் கொண்ட குக் வித் கோமாளி புகழ் அஸ்வினின் கம்பேக்கை தொடங்கி வைத்து இருக்கிறார் நடிகர் சிம்பு.அஸ்வினின் புதிய ஆல்பம் பாடலை சிம்பு தான் ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனவர் அஸ்வின். ஒருசில ஷார்ட் பிலிம்கள், சீரியல்களில் அஸ்வின் நடித்து இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவருக்கு மிகப் பெரிய பெயரை வாங்கி தந்தது. இதன் பின்பு பட வாய்ப்புகள் அஸ்வினுக்கு குவிய தொடங்கியது. அதன் மூலம் தான் ’என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் ஆடியோ வெளியீடு விழாவில் தான் 40 கதை கேட்டேன் என்று பேசி சர்ச்சையில் சிக்கினார் . படத்தைக்காட்டிலும் அஸ்வினுக்கு ஆல்பம் சாங்க்ஸ் நல்ல ரீச்சை வாங்கி தந்தது.
நான் உன்னை வெறுக்கிறேன்.. பிக் பாஸ் வருணை பற்றி அக்ஷரா வெளியிட்ட வீடியோ!
யாத்தி, குட்டி பட்டாசு, அடிபொலி போன்ற பாடல்கள் யூடியூப்பில் ட்ரெண்டிங் ஆனது. ஆனால் சர்ச்சைக்கு பின்பு அஸ்வினின் எந்த ஆல்பம் பாடல்களும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது அஸ்வின் சூப்பரான கம்பேக் கொடுத்துள்ளார். அவரின் ’பேபி நீ சுகர்’ என்ற பாடல் தற்போது யூடியூப்பில் வெளியாகியுள்ளது.
என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகணும்.. வருத்தப்பட்ட ராஜா ராணி 2 அர்ச்சனா அம்மா!
இந்த பாடலை சிம்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அஸ்வினின் இந்த பாடலில் அவருடன் ஜோடியாக பிக் பாஸ் புகழ் லாஸ்லியா நடித்துள்ளார். இவர்களின் ஆன் ஸ்கீரின் கெமிஸ்ட்ரி கியூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். சிம்புவின் ரசிகர்களும் இந்த பாடலை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
View this post on Instagram
சில தினங்களுக்கு முன்பு லாஸ்லியாவும் அஸ்வினும் சேர்ந்து இருப்பது போல் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதற்கான காரணம் தற்போது தெரிந்து விட்டது. இந்த பாடலில் லாஸ்லியாவுடன் சேர்ந்து குழந்தை நட்சத்திரம் விருத்தியும் நடித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil 3, Cook With Comali Season 2, Losliya, Simbu, Vijay tv