ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸில் என்ன நடக்கிறது? அசல் கோளாறு செய்த விஷயத்தால் வெடித்தது சர்ச்சை!

பிக் பாஸில் என்ன நடக்கிறது? அசல் கோளாறு செய்த விஷயத்தால் வெடித்தது சர்ச்சை!

அசல் கோளாறு பிக் பாஸ்

அசல் கோளாறு பிக் பாஸ்

பிக் பாஸ் போட்டியாளர் அசல் கோளாறுவால் பெண் போட்டியாளர்களுக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை என கூற தொடங்கியுள்ளனர்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக் பாஸ் 6ல் போட்டியாளராக களம் இறங்கி இருக்கும் பாடகர் அசல் கோளாறு பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  கடந்த வாரம் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிப்பரப்பாகி வருகிறது. 20 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் 21வது போட்டியாளராக மைனா நந்தினி என்ட்ரி கொடுத்துள்ளார். ஏற்கெனவே பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜிபி முத்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இப்படி இருக்கையில் தற்போது மைனா நந்தினியின் என்ட்ரிக்கு பிறகு வீட்டில் சிரிப்பு சத்தத்துக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது. நேற்றைய தினம் வீட்டில் முதல் நாமினேஷன் ப்ராசஸ் நடந்து முடிந்தது. இந்த வாரம் போட்டியாளர்கள் முதல் எலிமினேஷனை சந்திக்கவுள்ளனர்.

  இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர் பாடகர் அசல் கோளாறை வீட்டில் இருந்து உடனே வெளியேற்ற வேண்டும் என இணையத்தில் எதிர்ப்பு குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன. அதற்கு காரணம், அசல் கோளாறு பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம். அசல் கோளாறு குயின்ஸி மற்றும் ஆயிஷாவிடம் நடந்து கொண்ட விதத்தை ரசிகர்கள் பலர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

  இதில் சண்டே எபிசோடின் போது குயின்ஸி, விக்ரமிடம் பேசிக் கொண்டிருக்க அவரின் கையை பிடித்துக் கொண்டு அசல் கோளாறு  விடாமல் தடவுகிறார். குயின்ஸி பேச்சு கவனத்தில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் ரசிகர்கள் அதை நோட் செய்து விட்டனர். அதே போல், அசல் கோளாறு, மற்றொரு இடத்திலும் ஆயிஷாவின் கையை தடவுவதையும் ரசிகர்கள் கவனிக்க, அசல் கோளாறுவால் பெண் போட்டியாளர்களுக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை என கூற தொடங்கியுள்ளனர். இந்த காரணத்தை சுட்டிக்காட்டி அவரை உடனே வெளியேற்ற வேண்டும் எனவும் ரசிகர்கள் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

  இதை கமலும் வார்ன் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay tv