ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சீச்சீ! நான் அந்த மாதிரி பையன் கிடையாது.. நம்புங்க! சர்ச்சை குறித்து விளக்கமளித்த அசல் கோலார்!

சீச்சீ! நான் அந்த மாதிரி பையன் கிடையாது.. நம்புங்க! சர்ச்சை குறித்து விளக்கமளித்த அசல் கோலார்!

அசல் கோலார்

அசல் கோலார்

நேற்றைய தினம் அசல் கோலார் அளித்த பேட்டிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பிக் பாஸ் 6 போட்டியாளர் கானா பாடகர் அசல் கோலார் பெண்களிடம் நடந்து கொண்ட விதம் குறித்தும் பிக் பாஸ் வீட்டில் உண்மையில் நடப்பது என்ன? என்பதை பற்றியும் மனம் திறந்துள்ளார்.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிக் பாஸ் சீசன் 6 கடந்த மாதம் ஆரம்பமானது.முதல் வாரமே சண்டை, காரச்சார விவாதம், அழுகை, கோபம் என இந்த சீசன் கன்டெண்டுகளை அள்ளி வழங்க டி.ஆர்.பியில் கலக்க தொடங்கியது. இந்த சீசனில் மொத்த 21 போட்டியாளர்கள்.ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி மைனா நந்தினி.

    பிக் பாஸில் கலக்கும் ADK.. பழைய வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

    இதுவரை வீட்டில் இருந்து 3 பேர் வெளியேறியுள்ளனர். இந்த வாரம் நடைப்பெறவுள்ள எவிக்‌ஷனில் செரினா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அசல் கோலார் வெளியேறினார். அவரின் எவிக்‌ஷனால் அவரின் நெருங்கிய தோழியான நிவாஷினி பிக் பாஸ் வீட்டில் அழுதுக் கொண்டே இருக்கிறார். மக்கள் ஏன் அசலை வெளியேற்றினார்கள்? என ஆதங்கத்தில் கேமராவில் நிவா புலம்பி வருகிறார்.

    மீண்டும் சீரியலுக்கு வரும் கண்ணம்மா ரோஷினி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!

    வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்கள் யாருக்கும் அசல் எவிக்‌ஷனுக்கான காரணம் புரியவில்லை. அனைவரும் அசீம் வெளியேறுவார் என்று தான் நினைத்தார்கள். ஆனால் தனலட்சுமி மக்களின் கருத்தை அப்படியே வெளிப்படுத்தி அசல் தான் வெளியே செல்வார் என்றார். அதுதான் கடைசியில் நடந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் அசல் அளித்த பேட்டிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதில் அசல் பல விஷயக்களை ஷேர் செய்துள்ளார். அதாவது பிக் பாஸ் வீட்டில் நிவாஷினி, குயின்ஸியிடம் அசல் நடந்து கொண்ட விதம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பெண்களை அசல் தொட்டு பேசும் விதம் தவறாக இருப்பதாகவும் அவரை வீட்டை விட்டு  அனுப்ப வேண்டும் என்றனர். இதற்கு அசல் பதில் கூறியுள்ளார்.

    “நான் பெண்களிடம் தவறாக நடந்துக் கொள்ளவில்லை. என் சொந்த வீட்டில் இருப்பது போல் என் நண்பர்களுடன் நெருங்கி பழகுவது போல் தான் நடந்து கொண்டேன். அது வெளியில் இவ்வளவு தவறாக தெரியும் என நினைக்கவில்லை. நான் செய்தது தவறு தான். ஆனால் தப்பான நோக்கத்தில் செய்யவில்லை. ஒருவேளை என் நோக்கம் தப்பாக இருந்தால் அவர்கள் கண்டிப்பாக மறுப்பு சொல்லி இருப்பார்கள். அவர்களும்  என்னை நல்ல நண்பனாக தான் பார்த்தார்கள். கடைசியில் வெளியில் இப்படி தெரிந்து விட்டது. எனக்கு மீண்டும் வைல்டு கார்டு மூலம் உள்ளே செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. மறுபடியும் சென்றால் கண்டிப்பாக வேற மாதிரி விளையாடுவேன்”  எனவும் அவர் கூறியுள்ளார். ”என்னை நம்பிய ரசிகர்களை நான் ஏமாற்றி இருந்தால் அதற்கு மன்னிப்பும்  கேட்டுக் கொள்கிறேன்” என அசல் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay tv