ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வெளியேறிய அசல் கோலார்.. பிக் பாஸ் குழு கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வெளியேறிய அசல் கோலார்.. பிக் பாஸ் குழு கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அசல் கோலார்

அசல் கோலார்

நாள் ஒன்றுக்கு அசல் கோலாருக்கு ரூ. 15 முதல் ரூ. 17 ஆயிரம் வரை சம்பளம் என பிக் பாஸ் குழு ஒப்பந்தம் செய்ததாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பிக்பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக களம் இறங்கிய பாடகர் அசல் கோலாருக்கு பிக் பாஸ் குழு வழங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

    பிக் பாஸ் 6 கடந்த மாதம் முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது. 20 போட்டியாளர்களுடன் ஷோ ஆரம்பமானது. பின்பு மைனா நந்தினி என்ட்ரி கொடுக்க போட்டியாளர்கள் எண்ணிக்கை 21 ஆனது. கடைசியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிபி முத்து நிகழ்ச்சியை விட்டு பாதியில் வெளியேறினார். அந்த வாரம் முதல் எவிக்‌ஷன் புராசசில் டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த வாரம் நடைப்பெற்ற எவிக்‌ஷனில் பாடகர் அசல் கோலார் வெளியேற்றப்பட்டார். அவரின் வெளியேற்றம் மற்ற போட்டியாளர்களுக்கும் நிவாஷினிக்கும் அதிர்ச்சியை தந்தாலும் ரசிகர்கள் பிளான் செய்து அசலை வெளியேற்றினார்கள்.

    பிக் பாஸ் ஆயிஷா ஏற்கெனவே திருமணம் ஆனவர்.. போட்டுடைத்த முன்னாள் காதலன்!

    அந்த அளவுக்கு நெகட்டிவ் கமெண்டுகளை அசல் பெற்றார். பெண்கள் விஷயத்தில் அசல் கோலார் மீது ரசிகர்கள் பயங்கர கோபத்தில் உள்ளனர். பிக் பாஸ் வீட்டுக்குள் அசல் கோலார் பெண்கள் மீது அடிக்கடி ,கை வைத்து பேசுவது, நிவாவிடம் எப்போதுமே நெருக்கமாக கட்டிப்பிடித்தப்படி இருப்பது என பல சர்ச்சைகளில் சிக்கினார். அதுமட்டுமில்லை மைனா நந்தினி, குயின்ஸி, ஆயிஷா, ஜனனி என எல்லோரிடமும் அசல் நடந்து கொண்ட விதம் ரசிகர்களை எரிச்சலடைய செய்தது. இதனால் ரசிகர்கள் 3வது வாரமே அசலை வெறியேற்றியுள்ளனர்.

    கொட்டும் மழையில் கோபிநாத் செய்த காரியம்... மனுஷன் பயந்துட்டாரு!

    இது தெரியாமல் ஒருபக்கம் நிவாஷினி பிக் பாஸ் வீட்டில் அசலை நினைத்து அழுதுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து இருக்கும் அசல் அடுத்தடுத்து பேட்டிகளில் இந்த சர்ச்சை குறித்து பதில் அளிப்பார் என தெரிகிறது. இந்நிலையில்  பிக் பாஸ் குழு அசல் கோலாருக்கு வழங்கும் சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. நாள் ஒன்றுக்கு அசல் கோலாருக்கு ரூ. 15 முதல் ரூ. 17 ஆயிரம் வரை சம்பளம் என பிக் பாஸ் குழு ஒப்பந்தம் செய்ததாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுக் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay tv