ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Arnaav: மனைவி திவ்யா ஸ்ரீதரை தாக்கிய புகாரில் சீரியல் நடிகர் அர்னாவ் கைது

Arnaav: மனைவி திவ்யா ஸ்ரீதரை தாக்கிய புகாரில் சீரியல் நடிகர் அர்னாவ் கைது

அர்னாவ்

அர்னாவ்

அர்னாவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மனைவியும் சீரியல் நடிகையுமான திவ்யாவை தாக்கிய புகாரில் சீரியல் நடிகர் அர்னாவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சன் டிவி செவ்வந்தி சீரியலில் லீட் ரோலில் நடித்து வரும் திவ்யா ஸ்ரீதரும், விஜய் டிவி செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் அர்னாவும் திருமணம் செய்துக் கொண்டதாக இணையத்தில் செய்திகள் வெளியாகின. சமீபத்தில் இதனை திவ்யாவும் உறுதிப்படுத்தினார். திருமணத்தை அறிவித்த சில வாரங்களே ஆன நிலையில், தனது கணவர் அர்னாவ் தன்னை தவிர்த்து வருவதாக கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதோடு கணவர், கர்ப்பமாக இருக்கும் தன்னை கீழே தள்ளியதால், கரு கலைந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அர்னாவ், செல்லம்மா சீரியலில் தன்னுடன் நடிக்கும் அன்ஷிதாவுடன் நெருக்கம் காட்டி வருவதாகவும், அதனால் தன்னை தவிர்த்து வருவதாகவும் தெரிவித்திருந்தார் திவ்யா ஸ்ரீதர். இது குறித்து பேசிய அர்னாவ், கடந்த 5 வருடங்களாக திவ்யா தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும், கணவருடன் இருந்துக் கொண்டே விவாகரத்து ஆகிவிட்டது என பொய் சொல்லி தன்னை காதலித்ததாகவும், அவருக்கு பெண் குழந்தை இருந்ததையும் மறைத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

கல்யாணப்பரிசு 2 சீரியலில் தன்னுடன் நடித்த ரிஹானாவை, வீட்டில் யாரும் இல்லை வீட்டுக்கு வா என்று கூறி அர்னாவ் அழைத்ததாக ஆடியோ ஒன்று வெளியானது. இதையடுத்து ரிஹானாவும் பல நேர்க்காணல்களில் அர்னாவ் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விண்வெளியில் உருவாகும் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் படம்!

இதற்கிடையே திவ்யாவை அடித்து துன்புறுத்தியாக அளித்த புகாரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் அர்னாவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனை பெற்று கொண்ட நிலையில் இன்று அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதையடுத்து தலைமறைவாக இருந்த நடிகர் அர்னாவை, பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் கைது செய்துள்ளனர் போலீசார்.

First published:

Tags: Sun TV, Vijay tv