முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் பழைய இடத்திற்கு சென்ற பிக் பாஸ் அர்ச்சனா!

மீண்டும் பழைய இடத்திற்கு சென்ற பிக் பாஸ் அர்ச்சனா!

அர்ச்சனா

அர்ச்சனா

மீண்டும் இப்போது ஜீ தமிழுக்கு சென்றுள்ளார் அர்ச்சனா.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் டிவியில் ஆங்கராக வலம் வந்து கொண்டிருந்த அர்ச்சனா இப்போது மகள் ஜாராவுடன் மீண்டும் ஜீ தமிழ் பக்கம் சென்றுள்ளார்.

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினயாக இருப்பவர் வி.ஜே அர்ச்சனா. சன் டிவியில் தொகுப்பாளனியாக மீடியாவுக்குள் நுழைந்தவர் மூத்த ஆங்கராக இப்போது அனைவராலும் பார்க்கப்படுகிறார். ரியாலிட்டி நிகழ்ச்சி, இசை வெளியிட்டு விழா, மூவி புரமோஷன் ஷோ, ஸ்பெஷல் ஷோ, நடிகர், நடிகைகளின் பேட்டி என  இதுவரை கிட்டத்தட்ட பல நிகழ்ச்சிகளை தனது கெரியரில் தொகுத்து வழங்கி இருக்கிறார் அர்ச்சனா. விஜய் டிவியில் நம்ம வீட்டு கல்யாணம் இவருக்கு மிகப் பெரிய ரீச்சை வாங்கி தந்தது. சில ஆண்டுகள் விஜய் டிவியில் இருந்தவர் பின்பு ஜீ தமிழ் பக்கம் சென்றார்.

ஹேமா விஷயத்தில் பாரதிக்கு சவால் விடும் கண்ணம்மா. மறுபடியும் முதல்ல இருந்தா!

ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜீ குடும்ப விழா என பல ஷோக்களை தொகுத்து வழங்கினார். நடிகர் ரஜினிகாந்தை  பேட்டி எடுத்து, தன்னுடைய உட்சபட்ச கனவையும் அடைந்தர். தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றிக்கொண்டிருந்த அர்ச்சனா, அடுத்தக்கட்டமாக  தனது மகளையும் சின்னத்திரையில் அறிமுகம் செய்தார். இருவரும் சேர்ந்து சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். இதில் சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் மகன் மற்றும் மகளுடன் கலந்து கொண்டனர். இந்த ஷோ சூப்பர் ஹிட் அடித்தது. ஜாராவுக்கும் ஃபேன்ஸ் கூட்டம் உருவானது. சூப்பர் மாம் 2வது  சீசன் முடிந்த பின்பு அர்ச்சனாவுக்கு பிக் பாஸ் வாய்ப்பு தேடி சென்றது.

’தென்றல் வந்து என்னை தொடும்’ வெற்றியின் செல்ல மகனை பார்த்து இருக்கீங்களா?

உடனே ஜீ தமிழில் இருந்து மீண்டும் விஜய் டிவி பக்கம் சென்றார். அங்கு  அன்பு கேங்க் என்ற நெகடிவ் விமர்சனங்களையும்  அர்ச்சனா பெற்றார். ஆனால் விஜய் டிவி அவரை மிஸ் செய்யவில்லை. தொடர்ந்து மிஸ்டர்  & மிஸஸ் சின்னத்திரை, கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் என அர்ச்சனாவுக்கு வாய்ப்புகள் வழங்கி வந்தன. இந்நிலையில் மீண்டும் இப்போது ஜீ தமிழுக்கு சென்றுள்ளார் அர்ச்சனா.




 




View this post on Instagram





 

A post shared by zeetamil (@zeetamizh)



இந்த முறையும் தனது மகளுடன் சூப்பர் மாம் சீசன் 3 நிகழ்ச்சிக்காக அர்ச்சனா சென்று இருக்கிறார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த சூப்பர் மாம் நிகழ்ச்சியின் நடுவர் நடிகை குஷ்பு. வரும் செப்டம்பர் 4 முதல் ஞாயிறுதோறும் மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை ஜீ தமிழில் கண்டுக்களிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Vijay tv, Zee tamil