Home /News /entertainment /

ஏதோ என்னால முடிஞ்சதுன்னு இவ்வளவு பெரிய விஷயம் பண்ணிட்டாங்க அறந்தாங்கி நிஷா... குவியும் பாராட்டுக்கள்!

ஏதோ என்னால முடிஞ்சதுன்னு இவ்வளவு பெரிய விஷயம் பண்ணிட்டாங்க அறந்தாங்கி நிஷா... குவியும் பாராட்டுக்கள்!

அறந்தாங்கி நிஷா

அறந்தாங்கி நிஷா

நிஷாவின் மகளான சஃபாவின் 2 ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

    அறந்தாங்கி நிஷா தனது மகள் சஃபாவின் பிறந்த நாளுக்காக எடுத்திருக்கும் முயற்சி பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. அப்படி என்ன செய்தார் நிஷா? வாங்க பார்க்கலாம்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இன்று முக்கியமான விஜய் டிவி பிரபலமாக மாறியிருப்பவர் அறந்தாங்கி நிஷா. காமெடி பாதையில் பெண்கள் சாதிக்கலாம், வெள்ளித்திரையில் மட்டுமில்லை சின்னத்திரையிலும் அது சாத்தியமே என்று உரக்க சொல்லியவர். இவருக்கு என்று தனியாக பெரிய ஃபேன்ஸ் பட்டாளமே இருக்கிறது. மேடை பேச்சாளர், பட்டிமன்ற பேச்சாளர், ஆங்கர் என பன்முகங்களை கொண்ட அறந்தாங்கி நிஷா இப்போது யூடியூப் பிரபலமும் கூட.

    இதையும் படிங்க... பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியே போவது யார்? வெளியான தகவல்!

    ’கருப்பு ரோஜா’ என்ற பெயரில் இவர் நடத்தும் யூடியூப் சேனலில் பலவிதமான வீடியோக்களை நிஷா வெளியிட்டு வருகிறார்.அண்மையில் இவர் சென்னையில் புது வீடு குடி வந்த வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது. இந்நிலையில் நிஷாவின் மகளான சஃபாவின் 2 ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் பலருக்கும் முன்னுதாரணமாக நிஷா எடுத்து இருக்கும் முயற்சி பலரையும் வியக்க வைத்துள்ளது.

    இதையும் படிங்க.. வில்லியின் ரீஎன்ட்ரியை பாட்டு போட்டு வரவேற்கும் சீரியல் குழு! பாரதி கண்ணம்மா வெண்பா ரிட்டர்ன்ஸ்

    ஒரு விதை போல் நிஷா இந்த முயற்சியை தொடங்கி இருப்பதாக அந்த வீடியோவில் கூறியுள்ளார். அதாவது சஃபாவின் பிறந்த நாளை குழந்தைகள் காப்பகத்தில் நிஷா குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். வள்ளலார் காப்பகத்தில் இருக்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் ஒருவேளை உணவு வழங்கி அவர்களுடன் சிரித்து விளையாடி, ஜோக் செய்து அன்றைய நாளை ஸ்பெஷலாகியுள்ளார்.



    இந்த வீடியோவை பார்த்த பலரும் நிஷாவின் முயற்சிக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். பிறந்த நாள் கொண்டாட்டம் என்றவுடன் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டம் செய்யாமல் நிஷா ஸ்பெஷலாக செய்திருக்கும் இந்த காரியம் தான் பலரின் பாராட்டுக்களுக்கும் காரணமாகியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Aranthangi Nisha, Vijay tv, Youtube

    அடுத்த செய்தி