முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அவமானங்கள் பெற்று தந்த வெகுமதி.. ட்ரெண்டிங்கில் விஜய் டிவி அறந்தாங்கி நிஷா - என்ன காரணம்?

அவமானங்கள் பெற்று தந்த வெகுமதி.. ட்ரெண்டிங்கில் விஜய் டிவி அறந்தாங்கி நிஷா - என்ன காரணம்?

விஜய் டிவி அறந்தாங்கி நிஷா

விஜய் டிவி அறந்தாங்கி நிஷா

விஜய் டிவி அறந்தாங்கி நிஷாவின் யூடியூப் வீடியோ ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து லைக்ஸ்களை குவித்து வருகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

விஜய் டிவி அறந்தாங்கி நிஷாவின் யூடியூப் வீடியோ ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து லைக்ஸ்களை குவித்து வருகிறது. அதற்கு மிக முக்கியமான காரணம், இத்தனை வருட உழைப்பாக நிஷா சென்னையில் புது விட்டுக்கு குடி வந்துள்ளார்.

பெண்களுக்கு காமெடி சாத்தியமாகுமா என்கிற கேள்வியை உடைத்துச் சாதித்தவர் தான் நிஷா. கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்தார்..கலக்கப்போவது யாரு சீசன் 5′ நிகழ்ச்சியில் ‘ரன்னர் அப்’ பட்டத்தைக் கைப்பற்றினார். அந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தின் மூலம் நிஷாவுக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது.பின்னர், விஜய் டி.வி-யில் பல ரியாலிட்டி ஷோக்களில் நிஷாவின் குரல் ஒலித்தது

கொஞ்ச நாளில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷாவும்,அவரது கணவர் ரியாஸ் கலந்து கொண்டனர்.இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.மேடைப்பேச்சாளரான நிஷா, விஜய் டிவி மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான பிறகு கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார். முதலில் ஆண் குழந்தைக்கு தாயான அவர், பெண் பிள்ளையை பெற்றெடுத்து அடுத்த கட்டமாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். ஆனால் பிக் பாஸில் அவர் அன்பு கேங்குடன் சேர்ந்ததால் பல நெகடிவ் கமெண்டுகளை பெற்றார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தும் அவரை இந்த சர்ச்சைகள், அவமானங்கள் தொடர்ந்தனர்.

அந்த சமயத்தில் தான் ‘கருப்பு ரோஜா’ என்ற யூடியூப் சேனலை தொடங்கினார். அதில் பல வகையான காமெடி வீடியோக்கள், விலாக்ஸ், குக்கிங் வீடியோக்களை நிஷா வெளியிட்டு வந்தார். அந்த சேனலுக்கு நல்ல ரீச் கிடைத்தது. நிஷா மீது வைக்கப்பட்ட விமர்சனங்களும் மறைய தொடங்கின. வழக்கம் போல் கேலிகளை ஓரமாக வைத்து விட்டு விஜய் டிவியில் தனது பணியை தொடங்கினார் நிஷா. இப்போது பரதி கண்ணம்மா சீரியலிலும் நடித்து வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தான் நிஜாவின் சொந்த ஊர். பிறந்து வளர்ந்ததெல்லாம் அங்கதான்.  13 வருடங்கள் பட்டிமன்றப் பேச்சாளராக அறந்தாங்கி மட்டுமல்லாமல் அந்தப் பகுதிகளில் உள்ள வேதாரண்யம், பேராவூரணி, பட்டுக்கோட்டை எனச் சுற்றுவட்டாரத்தில் நடக்கும் கோயில் திருவிழாக்கள், ஆடி மாத விழாக்கள் எனப் பலவற்றிலும் பேசி இருக்கிறார். 13 வருடங்களுக்குப் பிறகு விஜய் டிவியில் கிடைத்த வாய்ப்பு தான் கலக்க போவது யாரு.

எம்.பி.ஏ முடித்துள்ள நிஜாவின் மிகப் பெரிய பலம் அவரின் கணவர், அம்மா, மாமியார் தான். கர்ப்பிணியாக இருந்த போதே தொடர்ந்து தனது காமெடி பணிகளையும் செய்து வந்தார். அழகா இருக்குறவ ஜெயிச்சத விட அவமானவப்பட்டவன் ஜெயிச்சது தான் அதிகம் என்ற நிஷாவின் வார்த்தைகள் நூறு சதவீதம் உண்மை.இந்நிலையில் தற்போது நிஷா கணவர் மற்றும் பிள்ளைகளுடன் சென்னைக்கு குடி வந்துள்ளார்.

' isDesktop="true" id="640169" youtubeid="tESblq5cV9g" category="television">

சென்னையில் புது வீட்டுக்கு வந்திருக்கும் செய்தியை ’கருப்பு ரோஜா’ சேனிலும் வீடியோவாக நிஷா வெளியிட்டார். வழக்கம் போல் நக்கல் நையாண்டி நிறைந்த அந்த வீடியோ தற்போது 2மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடூப்பில் 9 ஆவது ட்ரெண்டிகில் இடம் பிடித்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Aranthangi Nisha, TV Serial, Vijay tv