ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முக்கிய சீரியலில் அறந்தாங்கி நிஷாவின் அதிரடி சீரியல் என்ட்ரி!

முக்கிய சீரியலில் அறந்தாங்கி நிஷாவின் அதிரடி சீரியல் என்ட்ரி!

அறந்தாங்கி நிஷா

அறந்தாங்கி நிஷா

கண்ணம்மாவிற்கு பாரதி சிகிச்சை அளிக்க மறுக்கக்கூடாது என்பதை அவருக்கு புரிய வைப்பதற்காக அறந்தாங்கி நிஷா ஒரு புதிய கேரக்டரில் சீரியலில் என்ட்ரி ஆகியிருக்கிறார். 

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

தொலைக்காட்சி சீரியல்களில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாதவாறு அவ்வபோது அதிரடியான மாற்றங்கள் நடக்கும். இதில் சீரியல் நடிகர் நடிகைகள் மாறுவதும், அவ்வபோது புது என்ட்ரி வருவது வரை பல மாற்றங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும். இவற்றில் சிறப்பு என்ட்ரியாக வரும் கதாபாத்திரங்கள் ஒரு சில எபிசோடுகள் வந்தாலும், கதையில் இவர்களால் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். கதையின் போக்கை மாற்றும் தன்மை கொண்ட ஸ்பெஷல் என்ட்ரியாக, அறந்தாங்கி நிஷா பாரதி கண்ணம்மா சீரியலில் அதிரடியாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கிய நாள் முதல் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. சீரியல் ஹிட்டாக முக்கியமான காரணமாக இருந்த நடிகை ரோஷினி ஹரிப்பிரியா விலகி தற்போது புதிய கண்ணம்மா அறிமுகமாகியும், பாரதி கண்ணம்மா தொடருக்கு கிடைக்கும் வரவேற்பு குறையவே இல்லை. மேலும், குறிப்பிட்ட கால இடைவேளையில் பாரதிகண்ணம்மா சீரியலில் டிவிஸ்ட்டுகளுக்கும் பஞ்சமே இல்லை. அதிரடியான கதைப் போக்குகள், பாரதிகண்ணம்மா சீரியலை ஹிட் தொடராக மாற்றியுள்ளது. மேலும், எக்கச்சக்கமான ப்ரோமோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டன. அந்த வரிசையில் பாரதிகண்ணம்மா சீரியலில் அதிரடி என்ட்ரி கொடுத்துள்ளார் அறந்தாங்கி நிஷா.

தற்போது பாரதிகண்ணம்மா சீரியல் அடுத்த கட்டத்தை நோக்கி புதிய கதை களத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பாரதி மற்றும் கண்ணம்மாவின் விவாகரத்து வழக்கின் இடைக்காலத் தீர்ப்பாக, இருவரும் ஆறு மாத காலம் ஒன்றாக வாழ வேண்டும் என்று நீதிபதி அறிவித்ததை தொடர்ந்து, இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் நடக்கும் காட்சிகள் கலகலப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இதனிடையில் கண்ணம்மா பாரதியின் மருத்துவமனையில், அவரிடம் சிகிச்சைக்காக வருகிறார். ஆனால் கண்ணம்மா மீது இருக்கும் வெறுப்பின் காரணமாக அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு பாரதி மறுத்துவிடுகிறார்.

கண்ணம்மாவிற்கு பாரதி சிகிச்சை அளிக்க மறுக்கக்கூடாது என்பதை அவருக்கு புரிய வைப்பதற்காக அறந்தாங்கி நிஷா ஒரு புதிய கேரக்டரில் சீரியலில் என்ட்ரி ஆகியிருக்கிறார்.

பேச்சுத்திறன், டைமிங் சென்ஸ், மற்றும் தன்னுடைய நகைச்சுவையான உடல்மொழி ஆகியவற்றால் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் அறந்தாங்கி நிஷா. இப்போது சீரியலிலும் தலைகாட்டத் தொடங்கியது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

அறந்தாங்கி நிஷா தோன்றும் பாரதி கண்ணம்மா சீரியலின் ப்ரோமோ இங்கே.

' isDesktop="true" id="638645" youtubeid="F9eES1_mf6U" category="television">

பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் தான் நிஷா நடித்திருக்கிறார். இது ரசிகர்களை நிச்சயமாகக் கவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அறந்தாங்கி நிஷாவின் வருகை பாரதி கண்ணம்மா சீரியலில் எவ்வகையான மாற்றத்தை அல்லது புதிய டிவிஸ்ட்டை கொண்டு வரப்போகிறது என்று இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம். ஏற்கனவே, பாரதி மற்றும் கண்ணம்மாவின் ரொமாண்டிக் காட்சிகள் சமீபத்தில் காணப்படுகின்றன.

பல ஆண்டுகளாக பிரிந்திருக்கும் ஜோடியை சேர்த்து வைக்க நிஷா உதவுவாரா என்பதை விரைவில் தெரிந்து கொள்ளலாம்!

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV Serial, Vijay tv