Home /News /entertainment /

அறந்தாங்கி நிஷாவின் மரண மாஸ் டான்ஸ்! - வைரல் வீடியோ

அறந்தாங்கி நிஷாவின் மரண மாஸ் டான்ஸ்! - வைரல் வீடியோ

அறந்தாங்கி நிஷா, சுனிதா

அறந்தாங்கி நிஷா, சுனிதா

Cooku with comali : இன்ஸ்டாவில் அவ்வபோது ட்ரெண்டாகும் பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ் பதிவிடுவது நிஷாவின் வழக்கம். இம்முறை சுனிதாவுடன் நடனம் ஆடி பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவுக்கு லைக்ஸ் கொட்டுகிறது.




ஆண்  காமெடியன்கள் மட்டுமே  கொடிக்கட்டி பறந்துக்கொண்டிருந்த கலக்கப் போவது யாரு  காமெடி ஷோ மேடையில் தன் ஹூமராலும், பேச்சாற்றலாலும்  தனித்து தெரிந்தார்  'அறந்தாங்கி' நிஷா. தற்போது நடனம், நடிப்பு, சினிமா, சீரியல் என பிஸியாக இருக்கிறார். சின்னத்திரையின் காமெடி குயினாக இருந்தவர் பாரதி கண்ணம்மா மூலம் குணச்சித்திர நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து ஷோக்களில் தவறாமல் கெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்துவிடுகிறார் நிஷா. கூடவே இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவ்வாக இருக்கிறார். தன் மகள், மகன் பற்றி அடிக்கடி வீடியோ பதிவிடுவார். அண்மையில் தன் மகளுக்கு டெங்கு காய்ச்சல் வந்துவிட்டதாக வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார்.

புது வீட்டில் பால் காய்ச்சிய வீடியோ செம வைரலானது. நிஷாவின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று பலர் பாராட்டினார்கள். நிறை மாத கர்ப்பிணியாக குக் வித் கோமாளி - 2 ஷோவை நிஷா தொகுத்து வழங்கினார். இதனால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால்  எந்த பிரச்சனையும் இன்றி சுக பிரசவத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே மீண்டும் விஜய் டிவி ஷோவில் கலந்து கொண்டார். ஆறு மாதங்களேயான பெண் குழந்தை சஃபாவை விட்டுவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், இதற்காகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதன் பிறகு மீண்டும் விஜய் டிவி ஷோக்களில் பங்குபெற்றார். தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வருகிறார்.



 



 




View this post on Instagram





 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)








நிஷாவுக்கு காமெடி மட்டுமின்றி நடனமும் நன்றாக வரும் என்பது பிக் பாஸ் போட்டியாளர்கள் பங்குபெற்ற டான்ஸ் ஷோ மூலம் தெரிய வந்தது. முறையாக நடனம் கற்றுக் கொண்டவர்களுக்கு டஃப் கொடுத்து டான்ஸ் ஆடினார் நிஷா.

இன்ஸ்டாவில் அவ்வபோது ட்ரெண்டாகும் பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ் பதிவிடுவது நிஷாவின் வழக்கம். இம்முறை நாட்டு நாட்டு பாடலுக்கு சுனிதாவுடன் நடனம் ஆடி பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவுக்கு லைக்ஸ் கொட்டுகிறது. காரணம் குக் வித் கோமாளி புகழ் சுனிதா அருமையான டான்ஸர்.  ரியாலிட்டு டான்ஸ் ஷோக்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர். அவருக்கு இணையாக ஃபாஸ்ட் பீட் பாட்டுக்கு நிஷா டான்ஸ் ஆடுவது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.





உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Aswini S
First published:

Tags: Aranthangi Nisha, Cook With Comali Season 2, Vijay tv

அடுத்த செய்தி