Aranmanai Kili Monisha: மீண்டும் சின்னதிரைக்கு வரும் ’அரண்மனை கிளி’ மோனிஷா!

மோனிஷா

ஒரு வருட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் தமிழ் சீரியலில் நடிக்க உள்ள செய்தி தற்போது வெளியாகி உள்ளது.

  • Share this:
ரசிகர்களின் மனதை அறிந்து சீரியல்களை தயாரித்து ஒளிபரப்புவதில் விஜய் டிவி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்டிமெண்ட், ஆக்ஷன், வில்லத்தனம், சோகம், காதல் என சினிமாக்களுக்கு நிகராக விஜய் டிவி-யின் சீரியல்கள் இருக்கும்.

அப்படி ரசிகர்களை கவர்ந்த விஜய் டிவி சீரியல்களில் ஒன்று தான் அரண்மனை கிளி. மாறுபட்ட கதையுடன் ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம் இருந்தனர். கொரோனா லாக்டவுன் காரணமாக ரசிகர்களை கவர்ந்து இழுத்த பல சீரியல்களை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

பல மாதங்களாக ஷூட்டிங்குகள் முடங்கியதால் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னேறி வந்த ஏராளமான சீரியல்கள் பாதியிலேயே கைவிடப்பட்டன. இதில் ஒன்றாக சேர்ந்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்த அரண்மனை கிளி சீரியல். விஜய் டிவி சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பெரும்பாலும் சோஷியல் மீடியாக்களிலும் தங்களுக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பார்கள். அந்த வகையில் சீரியலில் சிறப்பாக நடித்ததன் மூலம் மட்டுமின்றி சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பதன் மூலமும் ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கும் ஒருவர் அரண்மனை கிளியில் ஜானுவாக நடித்த மோனிஷா.

இவர் கேரளாவை சேர்ந்தவர். இவரது முக்கிய பொழுதுபோக்கு புத்தகங்களுடன் நேரத்தை செலவிடுவது தான். படப்பிடிப்பு தளங்களிலும் கூட எப்போதும் புத்தகமும், கையுமாகத்தான் இவர் சுற்றுவாராம். துவக்கத்தில் தமிழ் பேச சிரமப்பட மோனிஷா, தற்போது சரளமாக தமிழ் பேச கற்று கொண்டுள்ளார். மாடலிங் துறையிலும் இவர் முத்திரை பதித்து வருகிறார். வெற்றிகரமாக ஓடி கொண்டிருந்த பல சீரியல்களின் இரண்டாம் பாகங்கள் எடுக்கப்பட்டு தற்போது ஒளிபரப்பபட்டாலும் அதில் முக்கிய வேடங்களில் நடித்த ஹீரோயின்கள் உட்பட பல கேரக்டர்கள் மீண்டும் இடம்பெறவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பதிலாக நிறைய புதுமுகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொழிலதிபர் கணவருடன் கேரளாவில் வசித்து வரும் நடிகை மோனிஷா மீண்டும் தமிழ் சின்னத்திரைக்கு திரும்ப வேண்டும் என்பதில் அவரது ரசிகர்கள் ஆவல் கொண்டிருந்தனர். கேரளாவில் இருந்து அடிக்கடி சென்னைக்கு வந்து அரண்மனை கிளி சீரியலில் நடித்த இவர், ஒரு வருட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் தமிழ் சீரியலில் நடிக்க உள்ள செய்தி தற்போது வெளியாகி உள்ளது.

ஆனால் இந்த முறை விஜய் டிவி-க்கு இவர் திரும்பவில்லை. மாறாக ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலில் விரைவில் நடிக்க உள்ளார் நடிகை மோனிஷா. ஜீ தமிழ் சேனலில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் "பூவே பூச்சூடவா" சீரியலில் புது கதாபாத்திரமாக நடிகை மோனிஷா அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் நடிகை மோனிஷாவின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: