• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இனி மகாவாக நடிப்பது இவரா?

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இனி மகாவாக நடிப்பது இவரா?

மோனிஷா

மோனிஷா

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் தலை காட்டாத மோனிஷா தற்போது மீண்டும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

  • Share this:
    சின்னத்திரை சீரியல்களில் ‘இவருக்கு பதிலாக இவர்’ என்று அவ்வப்போது நடிகர் மற்றும் நடிகைகள் மாறுவது இயல்புதான். ஆனால், சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களிலும், பல நடிகர்களும் நடிகைகளும் மாறியுள்ளனர்.

    புதிதாக ஒரு சீரியல் தொடங்கிய சில வாரங்களிலேயே அதன் நடிகர் நடிகைகள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுவதால் அந்த கதாபாத்திரத்தில் வேறு நடிகரை ரசிகர்களால் அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    இந்த மாதிரி நடிகர்களை மாற்றுவதற்கு ஒரு முடிவே இல்லையா என்று ரசிகர்கள் புலம்பி வரும் நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக விஜய் டிவியின் மெகா ஹிட் சீரியலான நாம் இருவர் நமக்கு இருவர் நாயகியாக நடித்து வந்த ரக்ஷிதா சீரியலில் இருந்து வெளியேற போவதாக அறிவித்துள்ளார்.

    இவர் அறிவிப்பை கேட்டவுடன் ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கொரோனாவால் நடுவில் நிறுத்தப்பட்டு, சீசன் 2 ஆக புதிய கதை களம் மற்றும் புதிய நடிகர்களோடு ஒளிபரப்பாகி வருகிறது. இரட்டை வேடத்தில் ஆர்ஜே செந்தில் நடித்து பட்டையை கிளப்பிய சீரியல் மீண்டும் தொடராமல் போனதே பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இரண்டாம் சீசனில் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கும் சீரியலில் இருந்து வெளியேறி உள்ளதாக ரக்ஷிதாவே தெரிவித்துவிட்டார்.

    அதிகாரப்பூர்வமான தகவல் வந்துள்ள நிலையில் அந்த பாத்திரத்தில் நடிப்பது யார் என்பதை பற்றிய விவரம் தற்போது வெளிவந்துள்ளது. நாம் இருவர் நமக்கு இருவர் மகாவாக இனி அரண்மனைக்கிளி தொடரில் நாயகியாக நடித்த மோனிஷா தான் நடிக்கப் போகிறார் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் மோனிஷா தான் மகாவா என்பதை உறுதிபடுத்தும் தகவல் இன்னும் வரவில்லை.

    மோனிஷா என்பதை விட அரண்மனைக்கிளி ஜானு என்றால் சின்னத்திரை ரசிகர்கள் அனைவருமே மிகவும் எளிதாக புரிந்துகொள்வார்கள். ரசிகர்கள் மனதைக் கவர்ந்த, அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்ற சீரியல்களில் ஒன்று அரண்மனைக்கிளி. ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் நடத்த முடியாமல் பல சீரியல்களையும் தொடர முடியாத நிலையில், முன்னணி தொடராக இருந்தாலும் அரண்மனைக்கிளி பாதியிலேயே கைவிடப்பட்டது. அரண்மனைக்கிளியில் நாயகியாக நடித்த மோனிஷா அதற்கு பிறகு எந்த சீரியலிலும் நடிக்க வில்லை.

    Aranmanai Kili Monisha replaces Naam Iruvar Namakku Iruvar Rachitha Mahalakshmi, Naam Iruvar Namakku Iruvar Rachitha Mahalakshmi, aranmanai kili monisha, monisha in naam iruvar namakku iruvar, vijay tv monisha, naam iruvar namakku iruvar, rachitha mahalakshmi hot, vijay tv rachitha, vijay tv naam iruvar namakku iruvar serial, naam iruvar namakku iruvar sasindhar, naam iruvar namakku iruvar serial today, naam iruvar namakku iruvar serial today episode, naam iruvar namakku iruvar hotstar, விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல், நாம் இருவர் நமக்கு இருவர் இன்று, நாம் இருவர் நமக்கு இருவர் ப்ரோமோ, நாம் இருவர் நமக்கு இருவர் ஹாட்ஸ்டார், நாம் இருவர் நமக்கு இருவர் ரச்சிதா, விஜய் டிவி ரச்சிதா, நாம் இருவர் நமக்கு இருவர் மகா
    மோனிஷா


    கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் தலை காட்டாத மோனிஷா தற்போது மீண்டும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. நடிகை மோனிஷா கேரளாவைச் சேர்ந்தவர். இவருடைய கணவர் ஒரு தொழிலதிபர் தன் கணவருடன் கேரளாவில் வசித்து வரும் நடிகை மோனிஷா மீண்டும் சீரியல்களில் நடிக்க வேண்டும் என்று பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர். ரசிகர்களின் விருப்பம் நிறைவேறுமா என்பதைப் விரைவில் தெரிந்து கொள்ளலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: