Home /News /entertainment /

ரசிகர்களுக்காக அந்த முடிவை எடுத்த ‘அரண்மனை கிளி’ ஜானு!

ரசிகர்களுக்காக அந்த முடிவை எடுத்த ‘அரண்மனை கிளி’ ஜானு!

அரண்மனை கிளி ஜானு

அரண்மனை கிளி ஜானு

அரண்மனை கிளி ஜானு போல் மகா கதாபாத்திரம் மக்கள் மனதில் பதியவில்லை.

    அரண்மனை கிளி ஜானு கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ள புத்தம் புது சீரியலில் லீட் ரோலில் நடிப்பதாக  தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    தமிழ் தொலைக்காட்சிகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் நிறைந்து காணப்படுவது விஜய் டிவி என்றால் அதில் மாற்றுக்கருத்தே இல்லை. இவங்க மட்டும் சீரியல எங்க இருந்தா தான் பிடிப்பாங்கனு தெரியாது. அதை விட முக்கியம் சீரியல் ஹீரோயின்களை தேர்வு செய்வதில் இவர்கள் செலுத்தும் கவனம். விஜய் டிவி சீரியல் ஹீரோயின்கள் சினிமா நடிகைகளுக்கு நிகராக சமூகவலைத்தளங்களில் கலக்குவது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ’அரண்மனை கிளி’ சீரியலை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள். இதில் மீனாட்சியின் மருமகளாக ஜானு என்ற ரோலில் நடித்தவர் நடிகை மோனிஷா.

    ராஜா ராணி சீரியல் நடிகை வீட்டில் நடந்த விசேஷம்.. குவிந்த விஜய்டிவி பிரபலங்கள்!

    மலையாள வரவான இவர் ஜானுவாக ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டார். அரண்மனை கிளி சீரியல் டி.ஆர்.பியில் கலக்கியது. கண்ணு தெரியாமல் போன ஜானுவை மீனாட்சி அம்மா சொந்த மகள் போல் பார்த்து கொண்டிருந்தார். அவர் தான் மீனாட்சி அம்மா என ஜானுவுக்கு தெரிய வரும் நேரத்தில் தான் கொரோனா தாக்கம் அதிகம் ஆனதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதன் பின்பு லாக்டவுன் ஆரம்பம் ஆனதால் பாதியிலே சீரியல் முடிக்கப்பட்டது. ரசிகர்கள் ஜானுவை ரொம்பவே மிஸ் செய்தனர்.

    15 கிலோ வரை எடை குறைத்து மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!

    ஜானுவாக நடித்த மோனிஷாவின் இன்ஸ்டா பக்கத்தில் மீண்டும் சீரியலில் நடிக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கண்டிப்பாக நல்ல கதை வந்தால் தமிழில் நடிப்பேன் என்றார் மோனிஷா. அப்போது தான் ’நாம் இருவர் நமக்கு இருவர் 2’ மகா ரோலில் இருந்து ரட்சிதா விலகினார். அந்த ரோலில் மகாவாக நடிக்க தொடங்கினார் மோனிஷா. சின்ன கேப்புக்கு பின்பு சின்னத்திரைக்கு வந்த மோனிஷாவை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)




     

    ஆனால் ஜானு போல் மகா கதாபாத்திரம் மக்கள் மனதில் பதியவில்லை. இதற்கிடையில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வருகிறது. ஷூட்டிங் முடிந்து விட்டது. ஆனாலும் மோனிஷாவை தமிழில் அதிக கவனம் செலுத்தும்படி ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். தனது ரசிகர்களுக்காக ஒரு நல்ல முடிவை எடுத்து இருக்கிறார் மோனிஷா.





     




    View this post on Instagram





     

    A post shared by Colors Tamil (@colorstvtamil)






    கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ள ‘பச்சக்கிளி’ சீரியலில் லீட் ரோலில்  மோனிஷா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 4 முதல் இரவு 7.30 மணிக்கு இந்த சீரியல் கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி