• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம்.. அரண்மனை கிளி ஜானு, மகா ஆனது இப்படி தான்!

பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம்.. அரண்மனை கிளி ஜானு, மகா ஆனது இப்படி தான்!

அரண்மனை கிளி ஜானு

அரண்மனை கிளி ஜானு

ஜானுவின் கணவர் கேரளாவில் இருக்கும் பிரபல தொழிலதிபர் ஆவர்

  • Share this:
    அரண்மனை கிளி ஜானுவாக ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற சின்னத்திரை நடிகை மோனிஷா இப்போது மகாவாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் களம் இறங்கியுள்ளார்.

    விஜய் டிவி சீரியல் ஹீரோயின்கள் சினிமா நடிகைகளுக்கு நிகராக சமூகவலைத்தளங்களில் கலக்குவது அனைவரும் அறிந்த ஒன்று.
    தமிழ் தொலைக்காட்சிகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் நிறைந்து காணப்படுவது விஜய் டிவி.இதில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் சென்ற வருடம் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான அரண்மனை கிளி சீரியல் ரசிகர்களின் ஃபேவரெட் சீரியல் லிஸ்டில் இடம் பெற்றிருந்தது.இதில் கதாநாயகியாக ‘ஜானு என்ற கதாபாத்திரத்தில் மோனிஷா நடித்து இருந்தார். இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

    சீரியல் கதைப்படி ஜானு அர்ஜூன் வீட்டில் மிகச் சிறந்த மருமகள். அன்பு, பொறுமை, நிதானம் என பட்டையை கிளப்புவார் .ஆனால் கொரோனா பேரலை காரணமாக திடீரென்று இந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் சீரியல் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். இதில் ஜானுவாக நடித்த மோனிஷாவை அதன் பின்பு எந்த சீரியலிலும் பார்க்க முடியவில்லை. ஜானு கல்யாணம் ஆனவர். இதை அவரே பல இடங்களில் உறுதி செய்துள்ளார். அவரின் சொந்த ஊர் கேரளா.கல்லூரி படிப்பு முடித்தவுடனே மலையாள சீரியலில் ஜானு அறிமுகமானர். அப்போது அவரின் ரோல் பெயர் ஜனனிக்குட்டி. இதற்கிடையில் மாடலிங்கும் செய்து வந்தார்.

    ஆரம்பத்தில் சுத்தமாக தமிழ் பேச தெரியாத ஜானு இப்போது நன்கு பேச கற்றுக் கொண்டார். அவரின் கணவர் கேரளாவில் இருக்கும் பிரபல தொழிலதிபர் ஆவர்.ஒருபக்கம் குடும்பம், மறு பக்கம் சீரியல், மாடலிங் என பிசியான லைஃப் ஸ்டைலை அழகாக மேனேஜ் செய்கிறார். ஜானுவின் நண்பர்கள் வட்டாரமும் அவரை கண்டு பொறாமைப்படாதவர்களே இல்லை எனலாம். இந்நிலையில் தான் மீண்டும் ஜானுவை களம் இறக்கியுள்ளது விஜய் டிவி .



     




    View this post on Instagram





     

    A post shared by Vijil (@vijilsmakeover)






    நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரச்சிதா சீரியலில் இருந்து விலகிய காரணத்தினால் அந்த ரோலுக்கு மோனிஷா இப்போது நடித்து வருகிறார். சின்னத்திரையில் மோனிஷாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிப்பிலும் அசத்தி விடுவார். இதனால் ரச்சிதாவுக்கு அடுத்தப்படியாக சீரியல் குழுவின் முதல் தேர்வு மோனிஷா தான்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: