• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தங்க மகனுக்கு பெயர் வச்சிட்டோம்.. பிரபல சீரியல் ஜோடி கொடுத்த அப்டேட்!

தங்க மகனுக்கு பெயர் வச்சிட்டோம்.. பிரபல சீரியல் ஜோடி கொடுத்த அப்டேட்!

சையது அன்வர் மற்றும் சமீரா ஷெரிஃப்

சையது அன்வர் மற்றும் சமீரா ஷெரிஃப்

தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையே நடிகை சமீரா ஷெரிஃப் வித்தியாசமாக தான் அறிவித்தார்.

  • Share this:
    குழந்தைக்கு சையத் அர்ஹான் (SYED ARHAAN) என்று பெயர் சூட்டி இருப்பதாக சையது அன்வர் மற்றும் சமீரா ஷெரிஃப் ஆகியோர் மகிழ்ச்சியுடன் தங்களது இன்ஸ்டா மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்து உள்ளார்கள்.

    ஸ்டார் விஜய் டிவி-யில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அவற்றில் பல சீரியல்களை ரசிகர்களை கவர்ந்து அவர்களது மனதில் தனி இடம் பிடித்து விடுகின்றன. அந்த வகையில் கடந்த 2016-ஆம் ஆண்டு மே முதல் 2019-ஆம் ஆண்டு மார்ச் வரை ஒளிபரப்பான ஹிட் சீரியல் தான் பகல் நிலவு. இதில் ரியல் காதலர்களாக சையத் அன்வர் மற்றும் சமீரா ஷெரிஃப் ஜோடி நடித்ததால் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியல்களின் பட்டியலில் சேர்ந்தது பகல் நிலவு. சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த இருவரும் பகல் நிலவு சீரியலில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றனர்.

    பகல் நிலவு சீரியலில் இருவரும் நடித்ததால் அந்த சீரியல் வெற்றிகரமாக ஓடி கொண்டிருந்த நிலையில், திடீரென சில தவிர்க்க இயலாத காரணங்களால் ஒரே நேரத்தில் இருவருமே அந்த சீரியலில் இருந்து விலகினர். இதனை ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். தெலுங்கில் பிரபல சீரியல் நடிகையாக திகழும் நடிகை சமீரா ஷெரிஃப், முதன் முதலில் 2006-ஆம் ஆண்டில் ETV-யில் ஆடபில்லா என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர். இவரது முதல் தமிழ் சீரியலான பகல் நிலவு மூலம் நம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்து விட்டார். தனிப்பட்ட முறையில் தனக்கென பெரும் ரசிகர்களை கொண்டுள்ளார்.

    மளிகை கடையில் வேலை.. பனகல் பார்க்கில் தூக்கம்! இமானுவேல் இமான் அண்ணாச்சியானது இப்படி தான்!

    பகல் நிலவு சீரியலில் இருந்து வெளியேறிய சமீராபின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘றெக்க கட்டி பறக்குது மனசு’ சீரியலை தயாரித்து அதில் ஹீரோயினியாகவும் நடித்தார். இதனிடையே கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சையது அன்வர் மற்றும் சமீரா ஷெரிஃப் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஹைதராபாத்தில் ஆடம்பரமின்றி எளிமையாக இஸ்லாமிய முறைப்படி இருவீட்டாரின் முன்னிலையில் தங்களது திருமணத்தை நடத்தி முடித்தது அன்வர்- சமீராஜோடி. தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையே நடிகை சமீரா ஷெரிஃப் வித்தியாசமாக தான் அறிவித்தார். தனது யூடியூப் சேனலில் தாங்கள் இருவரும் இனி கணவன் மனைவி இல்லை என்று தம்ப்நெயில் வைத்திருந்ததை பார்த்த ரசிகர்கள், வீடியோ உள்ளே சென்றுபார்த்த போது நாங்கள் இனி அப்பா, அம்மா என்று நற்செய்தியை ஷேர் செய்திருந்தார்.



     




    Instagram இல் இந்த இடுகையைக் காண்க





     

    Syed Anwar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@syedanwarofficial)






    இந்நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து புதிதாக பிறந்த தங்களது குழந்தைக்கு சையத் அர்ஹான் (SYED ARHAAN) என்று பெயர் சூட்டி இருப்பதாக சையது அன்வர் மற்றும் சமீரா ஷெரிஃப் ஆகியோர் மகிழ்ச்சியுடன் தங்களது இன்ஸ்டா மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்து உள்ளார்கள். இதனை தொடர்ந்து குழந்தை அர்ஹான் நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: