Home /News /entertainment /

சன் டிவியில் பொங்கல் ஸ்பெஷல் மெகாஹிட் திரைப்படம்.. ரசிகர்கள் உற்சாகம்!

சன் டிவியில் பொங்கல் ஸ்பெஷல் மெகாஹிட் திரைப்படம்.. ரசிகர்கள் உற்சாகம்!

அண்ணாத்த சன் டிவி

அண்ணாத்த சன் டிவி

அண்ணாத்த திரைப்படத்தை பார்க்காதவர்கள் சன் டிவி-யின் இந்த அறிவிப்பால் புத்தம் புதிய திரைப்படத்தை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

    தமிழகத்தில் பல பாரம்பரிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும் தொடர்ந்து 4 நாட்கள் கொண்டாடப்பட்டு வரும் திருவிழாவான பொங்கல் பண்டிகை நமக்கு முக்கிய பண்டிகையாக இருக்கிறது. புத்தாண்டு பிறந்து 6 நாட்கள் கடந்து விட்டது. இந்நிலையில் அடுத்த வார இறுதியில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வழக்கம் போல விமர்சையாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் குடும்பத்தினருடன் வீட்டிலேயே உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாராக உள்ளனர்.

    போகி பண்டிகை, தை பொங்கல் (அ) சூரிய பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் பெரிய திருவிழாவாக பொங்கல் பண்டிகை தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஜனவரி 13-ஆம் தேதி போகியுடன் துவங்க உள்ள பொங்கல் திருவிழா. ஜனவரி 16-ல் காணும் பொங்கலுடன் முடிவடைய உள்ளது. ஜனவரி 13 அன்று போகிப்பண்டிகை, ஜனவரி 14 தைப்பொங்கல், ஜனவரி 15 மாட்டு பொங்கல், ஜனவரி 16 காணும்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

    இதையும் படிங்க.. பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா மீண்டும் கர்ப்பமா? தெறித்து ஓடும் ரசிகர்கள்!

    எந்த பண்டிகை கொண்டாட்டமாக இருந்தாலும் மக்களை மேலும் உற்சாகமாக வைத்திருப்பது சின்னத்திரை டிவி சேனல்கள். பண்டிகை நாட்களில் காலை துவங்கி இரவு வரை எண்ணற்ற பக்தி நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகள், சினிமா பிரபலங்களின் பேட்டிகள், சினிமா பிரபலங்கள் பங்கு பெறும் கலகலப்பான ஷோக்கள், பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் டெலிகாஸ்ட் செய்யப்படுவது வழக்கம். முக்கியமாக அனைத்து தமிழ் முன்னணி சேனல்களிலும் திரைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்படுவதும் வழக்கம். எனவே பண்டிகை நாட்களில் எந்தெந்த சேனல்களில் என்னென்ன புதிய திரைப்படங்கள் போடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருக்கும். வரும் பொங்கலுக்கு புதிய திரைப்படங்களை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கடந்த நவம்பர் மாதம் தீபாவளிக்கு திரைக்கு வந்த புத்தம் புதிய மெகாஹிட் திரைப்படத்தை ஒளிபரப்ப உள்ளது ரசிகர்களின் அபிமான சேனலாக இருந்து வரும் சன் டிவி.

    இதையும் படிங்க.. விஜய் டிவி ஆல்யா மானசாவை வம்பிழுத்த நெட்டிசன்கள்.. அந்த இயக்குனர் தான் காரணமா?

    வரும் ஜனவரி 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை தினத்தன்று மாலை 6 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான "அண்ணாத்த" மெகாஹிட் திரைப்படம் சன் டிவி-யில் ஒளிபரப்பாக இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சன் டிவி-யின் அதிகார்பூர்வ சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்டுள்ளதோடு, நிகழ்ச்சி இடைவேளைகளின் போதும் சன் டிவி-யில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.



    இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்து உள்ளனர். அதே போல கொரோனா அச்சம் காரணமாக தியேட்டருக்கு சென்று அண்ணாத்த திரைப்படத்தை பார்க்காதவர்கள் சன் டிவி-யின் இந்த அறிவிப்பால் புத்தம் புதிய திரைப்படத்தை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Pongal, Rajinikanth, Sun TV

    அடுத்த செய்தி