அனிதா சம்பத்துக்கு அவரின் கணவர் பிரபா கொடுத்த சர்ப்பிரைஸ் வீடியோ இணையத்தில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. அதுமட்டுமில்லை அந்த வீடியோவில் அனிதாவின் ரியாக்ஷன் ட்ரெண்டிங்கில் சென்று கொண்டிருக்கிறது.
அனிதா சம்பத் பற்றிய அறிமுகமே இணையவாசிகளுக்கு தேவைப்படாது. நியூஸ் ஆங்கராக தனது பயணத்தை தொடங்கியவர் பிக் பாஸ், டான்ஸ் ஷோ என புகழடைந்த தற்போது வெள்ளித்திரையிலும் பிஸி ஆகிவிட்டார். சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக அனிதா சம்பத் பணிபுரிந்த போதுதான் விஜய் டிவி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. உடனே அதை ஏற்று வேலையை விட்டுவிட்டு ரூட்டை மாற்றினார். எதற்கெடுத்தாலும் அழுகை, கோபம் என ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்டுகளைப் பெற்றவர் பிக் பாஸ் வீட்டில் 50 நாட்கள் சிறப்பாக விளையாடி வெளியேறினார்.
பிக் பாஸிலிருந்து எலிமினேட் ஆகி வெளியே வந்த அனிதாவுக்கு அவரது அப்பாவின் மரணம் பேரிடியாக இருந்தது. அதிலிருந்து மீண்டவர் வழக்கம் போல் தன்னுடைய பணிகளை தொடர ஆரம்பித்தார். அனிதா சம்பத் சொந்தமாக யூடியூப் சேனலை தொடங்கி அதில் அழகு குறிப்பு, மேக்கப் குறிப்பு, சமையல் வீடியோ, ஃபேமலி விலாக்ஸ் என பல்வேறு வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுவார்.
அனிதாவுடன் அவரின் காதல் கணவர் பிரபாவும் சேர்ந்து பல வீடியோக்களை வெளியிடுவார். சமீபத்தில் கூட அனிதா, பிரபாவை விவாகரத்து செய்ய போவதாக கூட தகவல்கள் பரவின. ஆனால் அது உண்மையில்லை என இருவரும் சேர்ந்து யூடியூப்பில் வீடியோ மூலம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அனிதா சம்பத் யூடியூப்பில் பிரபா தனியாக, அனிதாவுக்கு சர்பிரைஸ் என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், விமல் படத்தில் நடிக்கும் அனிதா 15 நாட்கள் ஷூட்டிங்கில் பிஸியாக திண்டுக்கலில் தங்கி இருக்கிறார். அவரை சர்பிரைஸாக பார்க்க போகிறார் பிரபா. நண்பர் ஒருவரை துணைக்கு அழைத்து கொண்டு அனிதாவை பார்க்க பிரபா செல்கிறார். ஷூட்டிங்கில் அனிதா இருக்கும் இடத்திற்கே பிரபா சென்று சர்பிரைஸ் கொடுக்கிறார். முதலில் பிரபா மாஸ்க் போட்டு அனிதா அருகில் செல்வதால் அவரால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. பிரபா மாஸ்க் எடுத்த பின்பு அனிதா கொடுக்கும் ரியாக்ஷன் தான் இந்த வீடியோவின் ஹைலைட். தற்போது இந்த வீடியோ லட்சங்களில் லைக்ஸ்களை அள்ளி ட்ரெண்டிங்கில் சென்று கொண்டிருக்கிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anitha sampath, Bigg Boss Tamil